தலிபான்கள் விடயத்தில் ரஷ்யா சந்தேகம்

ஐக்கிய நாடுகள்: ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் தலிபான்கள் விடயத்தில் இணைந்து செயல்படுகின்றன. ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களாகிய தலிபான்கள் நேர்மையுடன் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா, தீவிரவாதம் பரவுவதை தடுக்கிறார்களா போன்றவற்றை  நிச்சியப்படுத்திக்கொள்ளும் வகையில் இணைந்து செயல்படுகின்றோம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சர்ஜெவ் லெவ்ரோவ்  தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளும் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம் தவிர்க்கவியலாதது

(பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்)

இலங்கை அதிபர், ஆசிரியர் சேவைகளைச் சேர்ந்த, அதிபர்களதும் ஆசிரியர்களதும் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. பெரேரா ஆணைக்குழுவின் சம்பள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்ற கோரிக்கை உட்பட, ஆறு கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

செல்வி நினைவாக….

(Maniam Shanmugam)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியான வவுனியா – சேமமடு குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த ‘செல்வி’ என்று அழைக்கப்படும் செல்வநிதி தியாகராசா அவர்கள் 1990 ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு, பல மாதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழர் சமுதாயத்தின் துன்பமான பக்கங்களில் ஒன்றாகிவிட்டது.

மற்றோர் அலை உருவாகலாம்

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, ஆனால் எந்தவொரு நேரத்திலும் மற்றோர் அலை உருவாகலாம் எனவும் எச்சரித்துள்ளார். 

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 10)


அ. வரதராஜா பெருமாள் —                

இலங்கையின் அரச சேவைகளில் உள்ளவர்களின் தொகை மற்றும் அதன் விளைவாக அரசு ஏற்றுள்ள செலவுச் சுமை தொடர்பான விடயங்கள் பற்றிய பொருளாதார ஆய்வில் அரசின் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸ் அமைப்புக்களிலுள்ள ஆளணிகளின் நிலைமையை அவதானித்தோம். இந்தப் பகுதியில் அதன் தொடர்ச்சியாக இலங்கையின் கல்வி மற்றும் பொது நிர்வாக அமைப்பிலுள்ள நிலைமைகள் பற்றி நோக்கலாம்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 747 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.  அதன்படி, 513,278 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன்,  843 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 454,532 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா சென்று நாடு திரும்பினார் மோடி

ஐ.நா. பொதுசபை கூட்டம் மற்றும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் டெல்லி வந்தடைந்தார். 

சீனாவின் பொருளாதார கொள்கை: ஐரோப்பிய வர்த்தகக் குழு அதிருப்தி

சீனாவின் பொருளாதார மூலோபாயம் ஐரோப்பிய நிறுவனங்களை மிகவும் சவாலான நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. அது நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் குழுவொன்று எச்சரித்துள்ளது. 

இலங்கை: கொரனா செய்திகள்

நாரஹேன்பிட்ட இராணுவ மருத்துவமனையில் இன்று (25) காலை மொடர்னா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வந்த ஏராளமான பல்கலைக்கழக மாணவர்கள் வருகைத்தந்துள்ளனர்.

பங்காளிகள் ஜனாதிபதியை சந்திக்க மும்முரம்

ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுகளும் இன்றி நிறைவடைந்துள்ளது.