பூமியின் மையத்தை ஆராய்ந்தவர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி

பூமியின் மையத்தை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுபிடிக்காத புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளனர். நமது பூமியின் மையத்தில் மாபெரும் நெருப்பு கோளம் உள்ளது. பூமியின் சூட்டை காப்பது அதுதான். சமீபத்தில் இந்த நெருப்பு கோளம் குறித்த அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியானது.

கண்ணீர்புகையில் சிக்கிய வேட்பாளர் மரணம்

தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று (27) நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் நிமல் அமரசிறி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளார்.

குருந்தூர் மலையில் கட்டுமானம் நிறைவு; திடீர் விஜயத்தில் அம்பலம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தண்ணிமுறிப்பு  பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி  அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.  

உடையும் விம்பங்கள்

எம்ஜி ஆர் இன் பிம்பமும் அதுசார்ந்த ஈழவிடுதலைப் போராட்டமும் இவ்வளவு தெளிவாக மைத்ரேயன் அளவிற்கு சரியாக தெளிவாக சொல்ல முடியுமா….? நேரம் எடுத்து காணெளியைப் பாருங்கள் உறவுகளே

தோல்வி பயத்தில் ஓடி ஒளியும் ரணில் – ராஜபக்‌ஷர்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது. 

எல்லை நிர்ணய சபையின் அறிக்கை விரைவில்

தேசிய எல்லை நிர்ணய சபையினால் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படும் என அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியாக பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலனை செய்ததன் பின்னர் இந்த பணி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் எல்லை நிர்ணய சபையின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மீண்டும் அதிர்ந்தது துருக்கி

துருக்கியின்  Nigde மாகாணத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 5.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. 

சீன டமாக் கிளீன் பார்க் திட்டம் முடங்கியது

நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவோம், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம், தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்துவோம் என, பெரும் ஆரவாரத்தோடும், ஆடம்பரத்தோடும் அறிவிக்கப்பட்ட டமாக் ஜாபா தொழில் பூங்காவின் கட்டுமானப் பணிகள் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கின்றன.

கொழும்பின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிப்பு

கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன.

பள்ளிக்கூடம்

ஏதோ வெள்ளைக்காரன் வந்து இப்ப 1816 இல் இருந்துதான் நமது மக்களுக்கு பள்ளிக்கூடம் வந்தது என்று பல பதிவுகள் உலாவுகின்றன.

அதுக்கு முன்னர் கல்வி இருக்கவில்லையோ என்றால், இருந்தது, ஆனால் அது திண்ணைப் பள்ளி, குருகுலக் கல்வி என்றும் பலர் பதிவிடுகின்றனர்.