(த ஜெயபாலன்)
இந்த மாகாண சபைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் உள்ளது என்றும் இந்த மாகாண சபையைச் சரிவர நடத்தினால் தமிழ் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த மாகாணசபையை சரிவரச் செயற்படுத்த தவறினால் தமிழ் மக்களின் வாழ்நிலை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின் தள்ளப்படும் என்றும் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு தெரிவித்தார். ஜேர்மன், டோட்முன் நகரில் யூலை 12இல் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுக் கூட்டத்திற்கு வந்திருந்த டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்து இருந்தார். அப்போது வடமாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி பத்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் பா டெனீஸ்வரன் அக்கருத்தைத் தெரிவித்து இருந்தார்.
(“வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :” தொடர்ந்து வாசிக்க…)