தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.

வருந்துகிறோம் தோழர்களே. வருத்தம் ஒருபுறம் இருக்கட்டும், இந்த விசைப்படகுகள் என்ன தொழிலை மேற்கொண்டன என்ற விபரத்தை நீங்கள் ஏன் குறிப்பிடத் தவறிவிட்டீர்கள்….? ட்ரோலர்தானே? ட்ரோலராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப் படுவதில் தப்பே இல்லை. அப்படியான நாசகாரத் தொழிலை மேற்கொண்டிருப்பார்களேயானால் அவற்றைப் பறிமுதல் செய்வதே சரியானது. நேற்று முன் தினம் எமது மீனவர்களின் ஆறு படகுகளின் நைலோன் வலைகளை அனலை தீவுக்கு மேற்குக் கடலில் தமிழக ட்ரோலர் படகுகள் அப்படியே அறுத்து நாசம் செய்துள்ளன.

(“தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் படுவது தொடர்பாக செய்திகள் எழுதும் ஊடகத் தோழர்களை நோக்கி ஒரு சிறு விண்ணப்பம்.” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் – தென்மராட்சி மக்கள்..!! பேசாத பார்க்காத கேட்காத இரகசியம்!

கனடாவில் – தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! மக்கள் என்ன பேசுகிறார்கள்..? கனடாவிலுள்ள யாழ் – தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் செயற்த்திட்டங்களும் என தெரியவருகிறது.

(“கனடாவில் – தென்மராட்சி மக்கள்..!! பேசாத பார்க்காத கேட்காத இரகசியம்!” தொடர்ந்து வாசிக்க…)

கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம்

சிவா சுப்பிரமணியத்தின் மரணத்தில் சிறப்பாக வெளிச்சமானது.

(நயினை ந.ஜெயபாலன்)

நாய் பூனையின் சிலுமிசங்களைக் கூட செய்திகளாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்கும் இலங்கைத் தமிழ் ஊடகத்துறைக்கு சிவா சுப்பிரமணியம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையோ?.

(“கூலிக்கு மாரடிக்கும் இலங்கை ஊடகங்களின் அயோக்கியத்தனம்” தொடர்ந்து வாசிக்க…)

நியோகா…………

 

நியோகா திரைப்படம் பார்க்ககிடைத்தது திரையரங்கில் ..எனக்கு மிகவும் பிடித்திருந்த்தது ஆதலால்
அது பற்றி குறிப்பெழுத வேண்டும் என்று நினைத்திருந்தேனனாலும் தமிழில்Type பண்ணுவது சிரமமம் எனக்கிருப்பதனல் அதிகமாக விமர்ச்சித்தோ விவாதித்தோ எழுதவில்லை இதை அது மட்டுமல்லாது
வேலைப்பழுவும் மறுபுறம் இருந்தாலும் சுருக்கமாக என் கருதுக்கள் பற்றி எழுதமுனைகிறேன்.

(“நியோகா…………” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜீ.ஏ ( பகுதி 44)

பற்குணம் தம்பலகாமத்தில் பணிக்கு சேர்ந்த சில மாதங்களின் பின் சில விவசாயிகள் பற்குணத்தைக் காண வந்தனர். தம்பலகாமத்தில. சேர்மனாக இருந்த ஒருவர் அந்த விவசாயிகளின் வயல்களுக்குப் போவதற்கான பாதையை மூடி தன் வயலோடு இணைத்துவிட்டார். அதை கேட்கப் போன அந்த விவசாயிகளை விரட்டி விட்டார். அவரகள் பொலிஸில் முறையிட்டும் முடியவில்லை. இதை பற்குணத்திடம் வந்து முறையிட்டார்கள். அவர் ஒரு முரடன் என பெயரெடுத்தவர். அதனால் அவருக்கு எல்லோரும் பயந்தே இருந்தனர். இதைக் கேட்ட பற்குணம் தான் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பினார்.

(“பற்குணம் ஏ.ஜீ.ஏ ( பகுதி 44)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )

கிண்ணியாவில் இருந்து குணராசா (செங்கை ஆழியான்) இவரை இடம் மஜீத் இடம் மாற்றியதால் அந்த இடத்தை தற்காலிமாக பற்குணம் பொறுப்பேற்றார். கூடவே தம்பலகாம்மும் அவரின் கீழே இருந்தது.ஒரு நாள் அவருடன் நான் கிண்ணியா போய் கொண்டிருந்தேன்.ஒருவர் நடந்தே பொய்க் கொண்டிருந்தார்.அவரைக் கண்டதும் காரை சற்று அருகே நிறுத்திவிட்டு என்னை பின்னால் இருக்க சொன்னார்.வழமையாக யாரை அவர் ஏற்றினாலும் நான் நானாகவே பின்னால் சென்றுவிடுவேன்.காரணம் வயதுக்கு மரியாதை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 43 )” தொடர்ந்து வாசிக்க…)

மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்

என் சிறு வயது முதல் பல கலியாண வீடுகளை எங்கள் சேனையூர் கட்டைபறிச்சான் பிரதேசத்தில் பார்த்திருக்கிறேன்.எனக்கு நினைவில் உள்ள முதல் கலியாண வீடு அப்புச்சியின் தங்கச்சி சின்னமாமியின் கலியாணம்.அந்த வீட்டு முற்றத்தில் பரப்பப் பட்ட வெண் மணலும் வாழை கமுகம் தென்னம் குருத்து அலங்காரமும் கொட்டகையும் வரிசைக் கால்களும் நிலவொளியில் பட்டுத்தெறிக்கும் அழகாய் பூத்த நாடகள்.

(“மாறி வரும் நம் மரபுகள்-கலியாணம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )

தம்பலகாமம் ஏ.ஜி.ஏ ஆக பொறுப்பேற்ற பின் தம்பலகாமம் பற்றி அவர் தன் பலகலைக்கழக நண்பர் சின்னராசா என்பவர் மூலம் அங்குள்ள நிலைமைகளை கேட்டு அறிந்தார்.அவர் அப்போது தம்பலகாமம் ப.நோ.கூ. சங்க முகாமையாளராக பணியாற்றினார்.அரசியல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இருந்தன. இதன் காரணமாக அதன் தலைமைப் பொறுப்பை பற்குணம் ஏற்றார்.இதுவும் அமைச்சர் மஜீத் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 42 )” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)

பற்குணம் 1972 நடுப்பகுதி வரை குச்சவெளி டி.ஆர்.ஓ வாக இருந்தார்.பின்னர் அன்றைய அரசினால் ஒரு சில பிரதேசங்கள் உதவி அரசாங்க அதிபர் தரத்துக்கு உயர்தப்பட்டன.அதில் தம்பலகாமம் பிரதேசமும் ஒன்று.இந்த பிரதேசத்துக்கு பற்குணம் உதவி அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டார்.இது மூதூர் தொகுதியில் உள்ள பிரதேசம் ஆகும்.இது இரட்டை அங்கத்தவர் கொண்ட தொகுதியாக இருந்தது.

(“பற்குணம் டி.ஆர்.ஓ ( பகுதி 41)” தொடர்ந்து வாசிக்க…)

ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்

தினகரனின் ஆசிரியர் பதவியை ஆளுமையினாலும் ஆற்றலினாலும் அலங்கரித்தவராக பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் சிவாசுப்பிரமணியத்தை மாத்திரமே குறிப்பிட்டுக் கூற முடியும். பேராசிரியர் கைலாசபதியைப் போன்று பல்கலைக்கழகத்தில் கற்றுத் தேறி பாண்டித்தியம் பெற்ற கல்விமான் அல்ல சிவாசுப்பிரமணியம். ஆனாலும், ஊடகத்துறையில் மாத்திரமன்றி மும்மொழி ஆளுமை, சர்வதேச விவகார அறிவு, நிர்வாகத்திறன், இலக்கியத்துறை ஆற்றல் பேச்சுவன்மை என்றெல்லாம் சிவாசுப்பிரமணியத்தின் தனித்துவத்திறன்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

(“ஊடகத்துறை நண்பர்களுக்கு சிவா ஒரு பல்கலைக்கழகம்” தொடர்ந்து வாசிக்க…)