ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை உருக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். பேக்கர்வால் முஸ்லிம் எனப்படும் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அச்சிறுமி, கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி தன் குதிரைகளை மேய்க்கச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.

(“ஆசிஃபாவும் எனது மகளே; அவளுக்காகவும் போராடுவேன்! – ஹாசினி தந்தை உருக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

நிர்மலாதேவி யார் என்றே தெரியாது; எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான்: என்னை குற்றம் சொல்ல முடியாது- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி

 

குற்றம் சாட்டப்பட்ட நிர்மலா தேவியை நான் பார்த்தது கூட இல்லை. எனக்கு 78 வயதாகிறது. பேரன் பேத்தி எடுத்த என்னை யாரும் குற்றம் சாட்ட முடியாது என்று ஆளுநர் பன்வாரிலால் பேட்டி அளித்தார். பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு வலை விரிக்கும் வகையில் பேசி சிக்கிய பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை குறித்தும் நிர்மலா தேவி பேசியுள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

(“நிர்மலாதேவி யார் என்றே தெரியாது; எனக்கு கொள்ளுப்பேரன் இருக்கிறான்: என்னை குற்றம் சொல்ல முடியாது- ஆளுநர் பன்வாரிலால் பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! -வியக்க வைக்கும் ரிசாத் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!

(எஸ். ஹமீத்)
பன்னெடுங்காலங்கள் பறந்துவிடவில்லை. பதின்மூன்றே பதின்மூன்று வருடங்கள்தான். இலங்கையில் ஓர் அரசியற் கட்சி உதயமாகி உச்சம் நோக்கியதோர் உன்னதப் பாதையின் வழியே ஓங்கிய புகழோடு உத்வேகமாய்ச் சென்று கொண்டிருக்கிறது. வியாபித்துக் கொண்டிருக்கும் அதன் மகிமையின் வீச்சம் வியக்க வைக்கிறது. கண்பட்டுவிடுமோ என்று அதனை நேசிப்போர் கவலைப்படுமளவிற்கு அதன் வளர்ச்சி காணப்படுகிறது.

(“அரசியல் நாகரீகத்தின் புதிய கதவுகளை அகலத் திறக்கும் அஇமகா! -வியக்க வைக்கும் ரிசாத் பதியுதீனின் வெளிப்படையான இயக்கங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்

விஞ்ஞான அடிப்படையில் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்திருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இப்போது ஊவா மாகாண சபைக்கு மீண்டும் கல்வி அமைச்சராக சாமர சம்பத் தசாநாயக்கவை, என்ன விஞ்ஞானத்தின் அடிப்படையில் தெரிவு செய்துள்ளது? என கேள்வி எழுப்பியுள்ள திலகராஜ் எம்.பி சாமர சம்பத்தினால் பாதிப்புற்ற பெண் அதிபருக்கு அநீதி ஏற்படக்கூடாது என்பதை சுயாதீன மனித உரிமைகள் ஆணைக் குழு உறுதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: திலகர் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’

“என்னை முழங்காலிட நிர்ப்பந்தித்தமை தொடர்பிலான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு, கல்வியமைச்சர் பதவியை மீண்டும் வழங்கியமையானது எனது பாதுகாப்பைக் கேள்வி குறியாக்கியுள்ளது.” என பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

(“‘எனது பாதுகாப்புக் கேள்விக்குறியாகியுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்

பெண் என்றுக்கூட பார்க்காது பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை முழங்காலிட நிர்பந்தித்த ஊவா மாகாண முதல்வர், சாமர சம்பத் தசாநாயக்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சு வழங்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த வடிவேல் சுரேஷ், வெளிநாடு சென்றிருக்கும் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி நாடு திரும்பியதும் அவரை நேரில் சந்தித்தது இது தொடர்பில் எடுத்துரைப்பேன் எனவும் தெரிவித்தார்.

(“முதலமைச்சரிடம் மீண்டும் கல்வி அமைச்சு: வடிவேல் சுரேஷ் எம்.பி கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

நாங்கள் போகின்றோம்..!!

ஆம்..!! நாடோடிகளான நாங்கள் எங்களின் பூர்வீக இந்த மலை கிராமத்தைவிட்டு செல்கின்றோம்..!!

ஆமாம் “ஆசிபாவின் இறுதி சடங்குகள் உள்பட அனைத்தையும் தடை செய்துவிட்டது இந்த கிராமம்”

10 கி.மி. தூரம் சென்று அடக்கி வந்த பிறகு,அந்த ஊரின் தண்ணீர் போக்குவரத்தை பாசிச இந்த்துவம் பேச்சை கேட்டு நிறுத்திவிட்டார்கள் ஆளும் பெரும்பாண்மை இந்து சொந்தங்கள்..!!எங்களால் அந்த கிராமமும் சிரமம்படுகின்றது..!!

(“நாங்கள் போகின்றோம்..!!” தொடர்ந்து வாசிக்க…)

சிரியா மீது போர் விமானங்கள் குண்டுமழை; தாக்குதலில் இறங்கிய அமெரிக்க கூட்டுப்படை ராணுவம்: டிரம்ப் அதிரடி உத்தரவு

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும், கட்டிடக் குவியல்களாகவும் காட்சி அளிக்கிறது.

(“சிரியா மீது போர் விமானங்கள் குண்டுமழை; தாக்குதலில் இறங்கிய அமெரிக்க கூட்டுப்படை ராணுவம்: டிரம்ப் அதிரடி உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

இன்று (ஏப்ரல் – 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை

கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. திருநங்கைகளை மேம்படுத்தும் வகையில் இந்த நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை, திருநங்கையர் நாள் எனக் கொண்டாட கடந்த 2011 மார்ச் 11-ல் அரசாணை பிறப்பிக்கப்பட் டது. திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைத்து அவர்களுக்கான நாள் கொண்டாடப்பட்டாலும், சமூகத்தில் இன்னும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்.

(“இன்று (ஏப்ரல் – 15) திருநங்கையர் தினம்: வாங்கப்பட்ட பாதை அல்ல; வழங்கப்பட்ட பாதை” தொடர்ந்து வாசிக்க…)

“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்

‘என்னுடைய அண்ணன் மணிரத்னத்துக்கு மீண்டும் நன்றி’ என்றும், ‘ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்’ என்றும் தேசிய விருது குறித்து மனம் திறந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். 65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

(““என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” – தேசிய விருது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்” தொடர்ந்து வாசிக்க…)