ஐ.நா. அறிக்கையில் எழுதப் பட்டுள்ள, ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை” என்ற வாக்கியம் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியது. ஐ.நா.வை குறை கூற முடியாத கையறு நிலையில், பலர் சுமந்திரனுக்கு எதிராக திரும்பி, ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தார்கள். இனப்படுகொலை பற்றி விளக்கம் கொடுத்த பலர், சட்ட ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல், வெறும் உணர்வு பூர்வமான கதைகளை பேசினார்கள். படித்தவர்கள் கூட, சிறுபிள்ளைத் தனமாக உரையாடுகின்றனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க முடியுமா? ஆம், முடியும். அதுவும் ஐ.நா. கூறும் அதே சட்ட ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நாங்கள் ஈழப்போரின் முடிவை எடுத்துக் காட்டியது தான் நாம் விட்ட தவறு. ஐ.நா. எமது தவறுகளை, தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி அறிக்கை எழுதியுள்ளது. எம் தலையில் நாங்களே மண் அள்ளிப் போட்டுள்ளோம்.
(“ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை – ஐ.நா. அறிக்கை” தொடர்ந்து வாசிக்க…)