வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள்  இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து  வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் வந்திறங்கியது

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய,  ஒரு சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை புதன்கிழமை (10) மதியம் அனுப்பியது.

கப்பலுக்கு பொருட்களை ஏற்றியவர் கடலில் விழுந்து மரணம்

நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

சீரற்ற கால நிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.தம்பலகாமம்  பிரதேச  கோயிலடியை  அண்டிய  வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன. 

சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி

கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக   செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார்.

பிரதி தவிசாளர் மீது தாக்குதல்: இருவருக்கு விளக்கமறியல்: எம்.பி உள்பட 10 பேர் தலைமறைவு

பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர்  பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் தலைமறைவாகிய  நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் புதன்கிழமை (10) அன்று உத்தரவிட்டார்.

நீலாபொல விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு கடற்கரை போல் மாறியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார்.

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடைபெறாத பாடங்களுக்கான நேர அட்டவணை இன்று (10) வெளியிடப்பட்டது. அந்த வகையில் நடைபெறாத பாடங்களை 2026 ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் ஜனவரி 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

பாடசாலைகள், பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்  பாடசாலைகளை தவிர அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும், டிசம்பர் 16 ஆம் திகதி பாடசாலை தொடங்கும்

மூன்றாம் தவணை பரீட்சைநடத்தப்படாது

 11 ஆம் வகுப்புக்கான பரீட்சை  ஒத்திகை மட்டுமே நடத்தப்படும்

 க.பொ.த உயர்தரத் தேர்வில் நடத்தப்படாத மீதமுள்ள பாடங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி தொடங்கும் .

ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு டிசம்பர் 15 ஆம் திகதி பாடசாலை தொடங்கும்.