கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

ஓரிரு நாட்கள் பெய்த தொடர்ச்சியான கனமழை காரணமாக நெற் செய்கை வயல் நிலங்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே விவசாயிகள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கி சில வயல்களில் மீண்டும் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையினை மேற்கொணடிருந்தனர்.

திட்வா புயல் காரணமாக வெள்ள நீரின் அளவு அதிகரிப்பினாலும் பல வயல் நிலங்கள் அழிவுற்ற நிலையில் .இயல்பு நிலை திரும்பி மீண்டும் தற்போது வெள்ள நீரில் மூழ்கியதால் பாரிய நட்டத்தை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனால் தம்பலகாமம் சம்மாந்துரைவெளி,பிச்சைவெளி கோயிலடி பகுதி நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

பாதிக்கப்பட்ட நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தர ஆவணம் செய்யுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்