நவம்பர் 19 அமரர் பத்மநாபா அவர்களின் பிறந்த தினம் ,இவர் பிறந்தது நவம்பர் 19, இறந்தது ஜூன் 19. இவர் பிறந்த நாளை எண்ணும் போதெல்லாம் இவரது இறந்த நாட்களே கண்முன்னால் வந்து நிற்கின்றது, அவர் மதம் , மொழி , இனம் சார்பற்ற ஆட்சியையே நடத்தினார், இன்னும் சற்று விளக்கமாக கூறினால் அவரின் ஆட்சி முறை ஒரு திப்பு சுல்தானின் ஆட்சி முறைக்கு ஒப்பானதாகும்.
மக்களுக்காக பாடுபட்ட திப்பு சுல்தானை துரோகி என்று கூறியவர்களும் உண்டு பத்பநாபாவையும் துரோகி என்றவர்களும் இன்னும் உயிருடன் பிணமாக நடந்து திரிகிறார்கள்.
திருகோணமலையில் தியாகிகள் தினம்

9 வது தியாகிகள் தினத்தின் போது திருக்கோணமலை தமிழர் சமூக ஐனநாயகக்கட்சியின் காரியாலயத்தில் பத்மநாபா உருவச்சிலைக்கு தோழர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
29வது தியாகிகள் தினம்

29வது தியாகிகள் தினம் இன்று(19.08.2019) காலை யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்தியத்தில் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் சுகு சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களான தோழர்கள் கங்கா, ஞானசக்தி போன்றவர்களும் உரையாற்றினர். இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்திலுள்ள தோழர்கள் மற்ற்றும் இறந்த தோழர்களின் உறவினர்களும் பங்குபற்றியிருந்தனர்.
தியாகிகள் நினைவாக….

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் விளையாட்டு பிரிவினால் 29வது தியாகிகள் நினைவாக நடாத்தப்பட்ட கிறிக்கெட் மென்பந்து சுற்று போட்டியில் (16/06/2019)வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வின் போது……
தியாகிகள் தினம்

தியாகிகள் தின நினைவாக வவுனியா மாவட்டத்தில் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக தடம்பதித்த தோழர்களில் சிலர்…………..
புதிய நாடாளுமன்றம்: பா.ஜ.க – காங்கிரஸ் இணைந்து செயற்படுமா?
(எம். காசிநாதன்)
இன்று திங்கட்கிழமை (17), 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி தொடங்குகிறது.
சிறுபான்மை வாக்குவங்கிதான் வெற்றியை தீர்மானிக்கிறதா?
(என்.கே. அஷோக்பரன்)
இலங்கையின் வாக்கு வங்கி அரசியல் கட்டமைப்பு என்பது, நாம் விரும்பியோ, விரும்பாமலோ இன-மத தேசியத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு விட்டது. கொள்கைகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் எவ்வாறு அமைந்தாலும், வாக்கு வங்கியின் அத்திவாரம் என்பது, இன்றும் இன, மத தேசிய அடிப்படைகளில்தான் இருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களுக்குள் இலங்கையின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாக, நாம் அவதானிக்கக்கூடியதொரு விடயம், கட்சி சார்ந்த வாக்குவங்கியின் வீழ்ச்சியாகும்.
செம்மலை நீராவியடி கோவில் பகுதியில் ஆர்ப்பாட்டம்
‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக, வரலாறெங்கும் நிறுவப்பட்டிருப்பதைக் காண முடியும்.
இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே
அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது; மறக்கப்படுகிறது. ஞாபகமறதி நிறைந்த சமூகம் தொடர்ந்தும் இன்னலுறுவதற்கு விதிக்கப்பட்டது.