கொரோனா அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து இம்முறை தீபாவளி பண்டிகைக்காக, மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கைதான கொஸோவோ ஜனாதிபதி தாசி
துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும்
தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க தேர்தல்: ட்ரம் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்?
ஸ்கன்டிநேவியன் நாடுகளைப் போல் மக்கள் நல அரசுகளை நிறுவ முற்படுகின்றதா நியூசிலாந்து.?
(சாகரன்)
பசுபிக் சமுத்திரத்தில் உள்ள பாலினீசியா தீவு ஒன்றில் இருந்து 14 ம் நூற்றாண்டில் குடியேறிய மாஓறி என்ற இனத்தவரே நியூசிலாந்தின் பூர்வீகக் குடியினர் ஆவர். உலகம் பூராக குடியேற்றங்களை ஏற்படுத்திய ஐரோப்பியர் 1642 நியூசிலாந்தை தமது முதல் காலடியை வைத்து கால ஓட்டத்தில் பாலினீசியா நியூசிலாந்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
வெனிசுவேலா எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் கைது
எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் றொலன்ட் கரென்னோ கைது செய்யப்பட்டதாக வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் தரேக் சாப் நேற்று தெரிவித்துள்ளார். பிரபல திடக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கரென்னோவின் வலிந்த காணமலாக்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் குவான் குவைடோ விமர்சித்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டம் எது?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது, அதில், 5804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்
(புருஜோத்தமன் தங்கமயில்)
மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார்.