20ஆவது திருத்த சட்டமூலமும் சகோதர யுத்தமும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிரான அலையொன்று, ஆளுங்கட்சிக்குள் இருந்து, எழுந்து வரும் காட்சிகளைக் கடந்த சில வாரங்களாகக் காண முடிகின்றது. அதுபோல, அமரபுர, ராமன்யா பௌத்த பீடங்கள், கத்தோலிக்க பேராயர்கள் பேரவை ஆகியவைகூட, 20ஆவது திருத்தச் சட்டமூலம் கைவிடப்பட்டு, புதிய அரசமைப்பொன்றை நோக்கி, அரசாங்கம் நகர வேண்டும் என்று கோரியிருக்கின்றன.

காவிரி ஆறு பற்றிய நல்ல தகவல்

பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் – பிறந்து வளர்ந்தது – MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
“சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?” என்றார்.

மட்டு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அதிரடியாக பதவி நீக்கம்; மேய்ச்சல் தரை விவகாரத்தையடுத்து நடவடிக்கை

மட்டக்களப்பில் உள்ள மேய்ச்சல் தரை நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிங்கள மக்களுடன் தர்க்கித்த மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா, அரசினால் பதவி நீக்கப்பட்டார். இதனை அடுத்து மட்டக்களப்பின் புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி கணபதிப்பிள்ளை கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கலுக்குள்ளாகும் அஸார்பைஜான், ஆர்மேனியயுத்தநிறுத்தம்

புதிய தாக்குதல்களை ஆரம்பித்ததாக அஸார்பைஜான், ஆர்மேனிய இனப் படைகள் ஒன்றையொன்று மாறி மாறி நேற்று குற்றஞ்சாட்டிய நிலையில், நாகொர்னோ-கரபாஹ் தொடர்பிலான கடும் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலான இரண்டு நாள்கள் மனிதாபிமான யுத்தநிறுத்தம் மிகுந்த சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

ரிஷாட் தலைமறைவு ; இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் பாதுகாப்பு உத்தியோகத்தரான ​கொன்ஸ்டபிள் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ரிஷாட் பயன்படுத்திய கார்கள் இரண்டும் துப்பாக்கிகள் 2 என்பனவும் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனைக் கைதுசெய்யுமாறு, நேற்றைய தினம் பொலிஸாருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதுடன், அவரைக் கைதுசெய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துபாயில் இருக்க இடம் இல்லாமல் பொது பூங்காவில் காலத்தை கழிக்கும் இலங்கை தொழிலாளர்கள் இலங்கை அரசு கண்டுகொள்வதே இல்லை..

(Siyana Siyana)

தங்கி இருக்க இடமில்லாமல் உணவுக்கு வேறு வழி தெரியாமல் உயிரை பாதுகாத்துக்கொள்ள பொது பூங்காவில் தங்கியிருந்து வாழ்க்கையை கடத்தும் அப்பாவி ஏழைகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலை இழந்த இலங்கையர்கள் துபாயில் உள்ள செட்டா என்ற பூங்காவில் தங்கியிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலவசக் கல்வியின் தந்தை (Father of free education)

C.W.W.கன்னங்கராவின் 136வது பிறந்த தினம் இன்று 13ந் திகதி ஆகும்.
மனிதனின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலான மனிதர்களின் வாழ்வு பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்றபடி அமைந்துள்ளது. இவ்வாறு கோடானுகோடி மனிதர்கள் அன்று முதல் இவ்வுலகிற்கு வந்து சென்று விட்டார்கள். அவர்களது தடயமே இவ்வுலகில் இல்லை. அதேநேரம் சில மனிதர்களின் வாழ்வு மனித வரலாற்றில் அழியாத்தடம் பதித்தவையாக அமைந்திருக்கின்றது.

கொரோனா நெருக்கடியால் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டு கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி நிலைமை காரணமாக, மாத்தளை மற்றும் அதனை அண்மித்த நகரங்களில், வியாபார நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெருந்தொற்றுக் காலகட்டத்தில் மொழியுரிமையும் இலங்கையும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவல்நிலை, அனைத்து மக்களையும் பதற்றம் அடையச் செய்துள்ளது. இந்தப் பெருந்தொற்றுப் பதற்றத்துக்கு, சமூக ஊடகங்கள் பரப்பும் போலிச் செய்திகள், ‘எரியும் நெருப்புக்கு எண்ணை ஊற்றும்’ கைங்கரியத்தைச் செய்கின்றன.

அரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும், தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும் பதவிக்காகவும், எவ்வளவு மட்டகரமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை.