கொரோனா வைரஸின் பிறப்பிடம் என கருதப்படும் சீனாவில் அந்த வைரசை தடுக்க உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கான முதல் காப்புரிமையை சீன அரசு அளித்திருக்கிறது. இதுபற்றி சீன அரசின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி பீப்பில்ஸ் டெய்லி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றில் பலகுரல்களில் பேசுதல்: சாத்தியங்களும் சவால்களும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
தமிழ் நாடாளுமன்ற அரசியல் பெரும்பாலும் ஏதோவோர் அந்தத்திலேயே இயங்கி வந்திருக்கிறது. ‘ஏக பிரதிநிதித்துவம்’, ‘கூட்டான மக்கள்தெரிவு’, ‘வலுவான பேரம்பேசல் சக்தி’ என்று காலகாலத்துக்குப் பெயர்களும் கோரிக்கைகளும் மாறினாலும் கடந்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொடர்ச்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனாலும் மாற்றுக் குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணமே இருந்தன. அவை இணக்க அரசியலை ஒருபுறமும் எதிர்ப்பு அரசியலை மறுபுறமும் கொண்டதாக இருந்து வந்திருக்கிறது. இம்முறை நாடாளு மன்றில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் அவ்வாறல்ல.
தேசியபட்டியல் அடிபிடிகள்
‘குரங்கின் கை பூமாலை’யான கூட்டமைப்பு
(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றைக்கும் இல்லாதளவுக்கான பின்னடைவை, இந்தப் பொதுத் தேர்தலில் சந்தித்து நிற்கின்றது. 2015ஆம் ஆண்டு, பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, கூட்டமைப்பு சுமார் ஒரு இலட்சத்து 88 ஆயிரம் வாக்குகளை, இந்தத் தேர்தலில் இழந்திருக்கின்றது.
இந்திய சுதந்திரம்……
கல்வி அமைச்சின் புதிய, செயலாளர் யார் தெரியுமா..?
தனது மகனுடன் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய உபவேந்தர்!
மத்தேகொடை வித்தியாதீப மத்திய மகாவித்தியாலய சா.த. பரீட்சை நிலையத்திற்கு முன்னால் கடந்த 12ம் திகதி ஒரு மோட்டார் வண்டி வந்து நின்றது. அந்நாளில் நடைபெற்றது க.பொ.த. சா.த. தமிழ்மொழி பரீட்சையாகும். மோட்டார் வண்டியிலிருந்து இறங்கி வந்தது தந்தை-மகன் இருவருமாகும். அவர்கள் இருவரில் ஒருவர் நுழைவாயில் பாதுகாப்பு அதிகாரியினால் நிறுத்தப்படுகின்றார்.
பிடல் காஸ்ட்ரோ பிறந்த நாள் கட்டுரை- கரும்புத் தோட்டத்தின் இரும்பு மனிதன்!

கொரில்லா போர் முறையால், கியூபாவின் பாடிஸ்டா ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்தை வீழ்த்திய சோசலிசப் புரட்சியாளர், கியூபாவின் முன்னாள் அதிபர், இறுதிநாள் வரை ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சில் நெருப்பாக எரியவைத்து, கியூபாவை தன்னாட்சி, தன்னிறைவு பெற்ற நாடாக உயர்த்திக் காட்டிய ஃபிடல் என்ற போராளியின் பிறந்த நாள் (ஆகஸ்ட் 13, 1926) இன்று.
மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்?
ஏமாற்றப்பட்டார் மைத்திரி…?
யார் வெற்றி பெற்றார்கள் என்பது முக்கியமல்ல; என்ன செய்யப் போகிறார்கள் என்பதே முக்கியமானது
(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அறிந்து, ஆச்சரியமடைந்த எவராவது நாட்டில் இருந்தார்களா? இது, நாடே எதிர்பார்த்த தேர்தல் முடிவுதான். தமது கட்சி, இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறும் என்று, பொதுஜன பெரமுனவினர் கூறி வந்தனர். அதில்தான் பலருக்குச் சந்தேகம் இருந்தது.
