கொவிட்-19இன் தற்போதைய கட்டம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ’மரணஓலம்’

(எம். காசிநாதன்)

இந்தியாவில் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 90 ஆயிரத்தைக் கடந்து, இன்னும் சில தினங்களில் ஒரு இலட்சத்தைத் தொட்டுவிடும் நிலை காணப்படுகின்றது. இந்த, நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இதுவரை 2,876 பேர்தான் என்பது, முன்கூட்டியே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும், மாநில அரசுகளின் பல்வேறான தீவிர முயற்சிகளின் பலன் என்பது ஒருபுறத்தில் இருந்தாலும், ‘கொரோனா வைரஸுடன் வாழப் பழகுவோம்’ என்பது, நடைமுறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகி விட்டது.