சிதறப்போகும் மத்திய கிழக்கு: “உடனே வெளியேறுங்கள்”

மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குத் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்குப் பிராந்திய போர் வெடிக்கும் ஆபத்து எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் இருந்தும் வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது பிராந்திய போர் ஆபத்துகளை அதிகரிப்பதாகவே இருக்கிறது.

ஈரானில் 43,000 கட்டடங்கள் சிதைவு

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என ஈரானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுட்டு வீழ்த்தப்பட்ட 56 ஆளில்லா விமானங்கள்

சவூதி வான்பரப்பிற்குள் நுழைந்த 56 ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு ஆளில்லா விமானம் ரியாத்தில் உள்ள அதீத பாதுகாப்புடைய தூதரகப் பகுதியை இலக்கு வைக்க முயன்றுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம்  53 ஆளில்லா விமானங்கள் மற்றும் 5 பாலிஸ்டிக் ஏவுகணைகள் அழிக்கப்பட்டன என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய விமானப் படை தெரிவித்துள்ளது.

பூகோள அரசியல் நெருக்கடிகளும் இலங்கையின் சவால்களும்

பூகோள அரசியலின் ஆழமான உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல், சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் இலங்கை போன்ற நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியாது. தற்காலத்தில் சர்வதேச அரசியல் போக்குகளை மிக எளிமையான அல்லது மேலோட்டமான கண்ணோட்டங்களில் அணுகி, பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தைத் தூண்டும் ஒரு அரசியல் கலாசாரம் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.

மலையகப் புகையிரதப் பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் தீவிரம்

மலையகப் புகையிரத மார்க்கத்தில் கண்டி முதல் பதுளை வரையிலான தண்டவாளங்களைப் புனரமைக்கும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

QR ஆல் Queue :சாரதிகள் கடும் அவதி

QR நடைமுறையின் கீழ் வாராந்தம் வழங்கப்படும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை எனத் தெரிவித்து, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாடகை வாகனச் சாரதிகள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனம்

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதிக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப். 23 இல் சட்டசபை தேர்தல்

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.