நடுத்தெருவில் பாய்ந்த சட்டமும் கொடுமையான மகிழ்வும்

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக, கடலுக்குள் பாய்ந்த இளைஞன், கைக்கூப்பிக் கும்பிட்டு மன்றாடியும், பொல்லுகளினால் அடித்தே கொன்ற சம்பவமொன்று பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள கடலில் 2009இல் இடம்பெற்றமை யாவருக்கும் ஞாபகத்தில் இருக்கும். அக்காட்சிகளை இப்போது பார்த்தாலும் இரத்தத்தை உறையவைக்கும்.