”அகதிகள் தொடர்பான கொள்கைகள் உடனடியாக திருத்தப்படும்”

இந்தியாவிலிருந்து திரும்பிய அகதி ஒருவர் பலாலி விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள சட்டக் கொள்கைகளை விரைவாகத் திருத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.