‘அராம்கோ’ வை மூடியது சவுதி அரேபியா

திங்கட்கிழமை (02) அன்று முன்னெடுக்கப்பட்ட ஈரானிய ஆளில்லா விமான (Drone) தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வளைகுடா கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையம் நாளொன்றுக்கு 550,000 பெரல் மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இந்த மூடல் நடவடிக்கை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயரும் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.