போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு ‘குறைப்புப் புள்ளிகள்’ வழங்கும் முறையை எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இதை தெரிவித்துள்ளார். GovPay ஊடாக அபராதப் பணத்தைச் செலுத்தும் முறைமை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படுவதோடு, இந்தப் புள்ளி வழங்கும் முறைமையும் ஆரம்பிக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.