தேசிய அரசாங்கத்தால் பயனில்லை – ரணில்

தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபட தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைவரும் தேசிய இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். கிருலப்பனையில் நேற்று(13) பிற்பகல் நடைபெற்ற கட்சி மறுசீரமைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனைக் கூறியுள்ளார்.