பாஜக தேசிய தலைவர்களை கட்சி தலைமை மாற்றம் செய்து வரும் நிலையில், அமைச்சரவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் செய்து, சில அமைச்சர்களுக்கு தேர்தல் ரீதியான பொறுப்பு வழங்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், அர்ஜுன் ராம் மேக்வால், பிரகலாத் ஜோஷி, கிஷன் ரெட்டி ஆகியோர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.