மருதானையில் பதற்றம்

அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானை டீன்ஸ் வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.