யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டு ஆட்சி

யாழ் மாநகரசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி கூட்டு ஆட்சியை பிடித்துள்ளது. இன்று (13) காலை நடந்த முதல்வர் தெரிவில், இலங்கை தமிழரசு கட்சியின் முதல்வர் வேட்பாளர் மதிவதனி, வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். அவருக்கு ஆதரவாக 19 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளருக்கு 16 வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சிக்கு, உள்ளூராட்சிசபை பங்காளியான ஈ.பி.டி.பி ஆதரவளித்தது.