2009 யுத்தத்திற்கு முன்பு 30 வருடம் கோமாவில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன்

தமிழ்மக்கள் தனிநாடு கோரி எப்போதும் போராடவில்லை! பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்.சிறிதரன் தற்போது இலங்கை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு விடப்பட்டிருக்கும் உத்தேச அரசியல்அமைப்பு சீர்திருத்தம் மீதான விவாதத்தின் போது 20 ஆவது அரசியல்அமைப்பை வரவேற்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உரையாற்றும்போதே இதனைக்குறிப்பிட்டார் தொடர்ந்து உரையாற்றும்போது தனது உரையில் 20 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பௌத்தமதத்திற்கு முன்னுரிமை வழங்கும் விடயத்தில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார் சுமார் 30 நிமிடங்கள் தொடர்ந்த சிவஞானம்.சிறிதரன் இன்றைய உரையில் 20 ஆவது திருத்தம் அவசியம் என்பதை ஆங்காங்கே சுட்டிக்காட்டினார்.

அப்படி என்றால் தனிநாடு கோரிபோராடி இன்றும் மாவீரர்களாக உறங்கிக்கொண்டிருக்கும் இடத்தில் எதற்கு விளக்கு கொளுத்தினார் எதற்கு நினைவேந்தல்கள் செய்யப்படுகின்றது எல்லாமே வேடம் தானா உங்களை நம்பினால் தமிழ்மக்கள் நடுத்தெருவில் இருப்பது உறுதி இப்பவே தெருவுக்கு பலர் வந்துவிட்டார்கள் அற்பசொற்ப ஆசைகளுக்காக எமது வீரம் நிறைந்த தமிழ்மக்களை விற்கின்றீர்களே இது நியாயமானதா அன்று தொட்டு இன்றுவரை தமிழ்தலமைகளால் ஏமாற்றப்படுபவர்களாகவே எமது இனம் இருப்பது கவலை அழிக்கின்றது தமிழ்மக்கள் சுயமாக சிந்தித்து அழிவில்லாத சிந்தனை உடைய மற்றும் தமிழ்மக்களை பாதுகாக்கும் அரசியல் தலமையுடன் கைகோர்த்து நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றுவோம்