இலங்கையிற்கான மோடியின் பயணம் உணர்த்துவது என்ன…?

இந்தியாவின் தற்போதைய அரசிற்கு இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாட்டுனும் தற்போது அதிகம் நல்லுறவு இல்லாத சூழலே இருக்கின்றது.
ஒருகாலத்தில் இந்த நாடுகள் எல்லாம் இந்தியாவுடன் மிகவும் நல்லுறவுடன் இருந்தார்கள் அல்லது இருக்க வைக்கப்பட்டிருந்தாரகள்.

அது பாஜ கட்சியின் ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட காலத்தில் இருந்து படிப்படியாக சிதைந்து வருவதையே அவதானிக்க முடிகின்றது.

இதில் தற்போது இலங்கையில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார உறுதித் தன்மையை பேணுதல் என்பதற்கு உதவுதல் என்பதாக இந்தியா தனது நட்பு நாட்டுப்பட்டியலுக்குள் இலங்கையை இழுந்து வந்துவிட்டதாக உலகப் பார்வையிற்கு செய்தியை சொல்ல முற்பட்டிருக்கின்றது.

இது இலங்கை முழுவதும் என்பதே முதன்மையாகவும் அங்கு வாழும் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சனை அதிலும் சிறப்பாக வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பிரச்சனையான அதிகாரப் பகிர்வு என்பது இரண்டாம் பட்சமாக மாற்றப்பட்டதாகவுமே உணர முடிகின்றது.

அடிப்படையில் மத்தியில் அதிகாரங்களை குவிப்பது மாநிலங்களின் அதிகாரங்களை பறிப்பது என்றாக பயணிக்க முற்படும் பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசிடம் அதிகாரப் பகிர்வு என்பதாக ஈழத் தமிழர் பிரச்சனையின் பால் அதிக அக்கறையுடன் செயற்படும் என்பதாக நாம் எதிர்பார்க்க முடியாது.

சும்மா மரியாதை நிமிர்த்தம் சிறுபான்மைத் தமிழ் தலைவர்களை மோடியின் சந்திப்பை நாம் பாரக்க முடியும்.

தமிழர் தரப்புத் தலைவர்களும் செத்த பாம்பு என்ற நிலையிலேயே அதிகம் ‘தேசியம்’ என்ற அடிப்படைவாத சொல்லை மட்டும் தூக்கிச் சுமந்து தேர்தலில் நிற்கும் நிலையில் உள்ளவரகளாகவே இருப்பது என்பது இந்த பலவீனமான நிலையிற்கு இன்னொரு காரணம் ஆகும்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்பதாக அதிக கவனம் செலுத்தி மெதுவாக நிதானமாக அனுர குமார திசநாயக்கா அரசு நகர்வதற்கு ஏதுவான உதவிகளை ஒத்துழைப்புகளை இந்தியாவிடம் நட்பாக பெற்றுக் கொள்ளல் என்பதாகவே இந்த இந்திய பிரதமரின் பயணத்தால் இலங்கையிற்கு கிடைத்ததை நாம் பார்க்க முடியும்.

இதன் ஊடு சீனாவின் இலங்கையில் உள்ள பிரசன்னத்தை சமமப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முடியும் என்ற இந்தியாவின் நம்பிக்கை அது சார்ந்த அணுகுமுறையாக இதனை நாம் மேலதிகமாகவும் பார்க்கலாம்
சாதாரண துவிச்சக்கர வண்டி இரு சக்கர வேக வானகம் நீர் இறைக்கும் இயந்திரம் விவசாயத்திற்கு பாவிக்கும் சில அடிப்படை இயந்திரங்கள் என்று எல்லாவற்றையும் அதிகம் இந்தியாவில் இருந்து இறக்கு மதி செய்யும் நிலையில்தான் இந்தியாவின் பொருட்களுக்கான சந்தை இலங்கையில் இருக்கின்றது

இதற்கு அப்பால் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தல் என்பதில் இருந்து இலங்கை தன்னை விடிவித்துக் கொள்வதற்கு இந்தியாவின் தொழில் நுட்பத்தை அது சார்ந்த தொழிற் சாலைகளை இலங்கையிலும் நிறுவதுல் என்பதாக இலங்கை நகருதல் என்பதாக ஒப்பந்தங்கள் உடன்பாட்டிற்கு வருவதற்கு மோடியின பயணத்தை நாம் பயன்படுத்தியிருக்கலாம் என்ற என்ற அகண்ட எம் பார்வை விரிவடைய வேண்டியுள்ளது.

சிறிய ஆணியிற்கும் சட்டையிற்கான பொத்தானுக்கும் இறக்குமதிகளை நம்பியிருப்பதைத் தவிர்பதற்காக இந்தியாவின் தொழில நுட்ப இயந்திரங்களை தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்தல்.
இதில் இலங்கைப் பல்கலைக் கழக பட்;டதாரிகளை இதில் ஈடுபடுத்தல் அவர்கள் கூடாக இவற்றைச் செழுமைப்படுத்தல் என்பதாக எமது பல்கலைக் கழக சமூகத்தை நாம் உற்பத்தியில் ஈடுபடுத்த இவற்றை பயன்படுத்தலாம் என்பது இன்று அவசியம் ஆகின்றது

புகையிரத் பாதைகளை அமைத்தல் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை பெறுதல் என்பதான முன்மொழிவுகளும் திட்டங்களும் வரவேற்கத்தக்கன.
இதனுடன் கூடவே எம்மிடம் உருவாக்கப்படும் மேலதிக மின்சாரத்தை இந்தியா கடல் மார்க்மாக கொள்வனவு செய்தலும் நம்பிக்கை தரும் விடயங்கள்தான்

இதற்க அப்பால் எல்லை தாண்டிய தமிழகத்து மீனவர்களின் பிரச்சனையில் இலங்கை கடற் தொழிலாளர்களின் பொருளாதாரம் இழுவைப் படகுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

இதனை முற்று முழுதாக நிறுத்துதல் என்பதான முடிவிற்கு இந்தியாவை கொண்டுவருதல் என்பது மோடியின் இந்த விஜயத்தில் முக்கிய விடயங்களில் ஒன்றாக்கப்பட்டிருக்க வேண்டும்

இது வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை என்பதற்குள் சுருக்காமல் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை என்பதாக அணுகப்பட வேண்டும்

கச்சதீவை தமதாக்கி கொள்வது என்ற தமிழ் நாட்டின் கோசத்திற்குள் தமிழக மீனவர்களின் எல்லை தாண்டலை, சட்ட விரோத சுற்றுச் சுழலுக்கு எதிரான செயற்பாடுகளை இணைத்து நீர்த்துப் போகச் செய்யும் தமிழ் நாட்டு தேர்தல் அரசியல் கோசம் இதனால் இல்லாமல் செய்திருக்கப்பட வேண்டும்

மலையக மக்கள் எப்போது நல்ல தீர்வுகளை பெறாமல் இம்முறையும் பல வீடுகள் பொது மருத்துவமனை என்றாக சலுகையுடன் தமக்கான பிடிவிறாந்தாக மலையக மக்களை இம்முறையும் இந்தியா கையாண்டதையே பார்க்க முடிகின்றது

இதற்குள் தமக்கான மாலை மரியாதகைளை ஏற்றுக் கொள்ளும் தற்போதைய இளம் மலையகத் தலைவர்களையே நாம் தொண்டமான் காலத்தில் இருந்து இன்று வரை காண முடிந்தது

இலங்கையின் அதிவிசேட கௌரவப் பட்டம் ‘… இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் மித்ர விபூசண விருது தனக்கு வழங்கப்பட்டமை தனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்…..’ என்று மோடி மகிழ்ந்திருந்தாலும்…

இந்தியாவிடம் தொடர்ந்தும் உதவிகளை பெறுதல் என்பதாக இலங்கை அரசு தனது பொருளாதார சறுக்கல் இன்றிய பயணத்திற்கு அத்திவாரத்தை இந்த அதி உயர் கௌரவத்தின் மூலம் உறுதி செய்ய முயலும் இலங்கை அரசின் செயலாகவே நாம் இதனை அதிகம் பார்க்க முடியும்

உலகெங்கும் அமெரிக்கா போட்டுள்ள வரி என்ற போரில் இருந்தும் எம்மளவில் விடுபட இலங்கை இந்தியா என்ற இரு தரப்பும் வரிக்குறைப்பு அல்லது வரித் தவிர்ப்பு என்பதாக பேச்சுக்களை நகரத்தி இருக்கலாம்.
ஆகக் குறைந்தது மருந்து உணவுப் பொருட்கள் போன்று அத்தியாவசியப் பொருட்களுக்காகவது இதனைச் செயற்படுத்தல் என்ற ஒபபந்தங்கள் ஏற்பட்டிருந்தால் அது இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்

கூடவே ஆடை தொழிற்துறையிற்கு திருப்பூர் போன்றதொரு தொழில் நகரத்ததை இலங்கையில் ஏற்படுத்தல் என்பதான ஒப்பந்ததும் மிகவும் பயனள்ளதாக இருந்திருக்கும்

இதிலும் இரு தரப்பு ஒத்துழைப்புடனான இணைப்பு தொழில் முயற்சி ஒன்று ஆரம்பிப்பதற்கு ஆரம்ப நடவடிக்கைகளை ஏற்படுத்தி இருக்கலாம்
சுற்றுலாத்துறையில் பரஸ்பரம் இணைந்து செயறபடுவதற்கான பயணங்கள் விசா தவிர்ப்பு என்பதாகவும் சில முன்னேறற்ங்ளை ஏற்படுத்தயும் இருக்கலாம்.

இனிவரும் நாட்களில் இது பற்றி இருதரப்பும் அதிகம் முயலும் என்று நம்புவோம்

இலங்கையின் பௌத்தம் இலங்கையின் தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றது என்ற பார்வைகள் பாஜக அரசை இலங்கை அரசியிறகு எதிராக கடும் போக்கை கடைபிடிக்கவில்லை.

இதற்கான கோள் மூட்டல்களை இந்திய சங்க பரிவாரங்கள் மூலம் மறவன் புலத்தவர்களால் செயற்படுத்த முனைந்து தமிழ் நாடு போலவே இலங்கையிலும் தோற்றும் போவார்கள் என்பதால் இலங்கைத் தமிழர்களை இந்துத்துவா என்ற சனாதன கொள்ளையிற்குள் பிணைத்து இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையை பா.ஜ.க வின் மோடி கையாளவில்லை என்பதும் இந்த பயணத்தில் உணர முடிகின்றது.