இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2019

ஜே.ஆர் ஜெயவர்தனாவினால் கொண்டுவரப்பட்ட சர்வ வல்லமை கொண்ட இந்த ஜனாதிபதி பதவி பாராளுமன்றத்திற்கான அதிகாரங்களை ஜனாதிபதியே மேலாண்மை செய்து ஜனநாயக விழுமியங்களுக்கும், பன்முகத் தன்மையிற்கும் சாவு மணி அடித்ததாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இலங்கையில் நிலவி வந்த சிறுபான்மையினரையும் பெரும் பான்மையினரையும் சம உரிமைகளுடன் நடாத்துவது என்பதற்கு முன்பை விட சாவு மணி அடிக்க ஆரம்பித்த முக்கிய புள்ளியாகவும் இந்த ஜேஆர் இன் ஜனாதிபதி சட்ட மூலத்தைக் கொள்ளலாம்.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது காலனி ஆதிக்கத்தை அந்தந்த நாடுகளில் கொண்டு செல்வதற்காக உருவாக்கிய பிரித்தாளும் கொள்கையை இலங்கையிலும் கையாண்டது.

பெரும்பான்மை சிங்கள மக்களையும் ஏனைய சிறுபான்மை இன மக்களையும் இணைந்து தமக்கெதிராக உரிமைக் குரல் கொடுக்காமல் அடக்கி ஒடுக்குவதற்கான மக்களை திசைமாற்றும் நடவடிக்கையாக அரசு அதிகாரத்தில் சனத் தொகை விகிதாசாரத்திற்கு மாறாக அதிகமாக தமிழர்களை அரச சேவைகளில் அமர்த்தி அதிகாரம் செய்துவித்து இனமுரப்பாட்டிற்கான அடித்தளத்தை நாசூக்காக உருவாக்கிய சூழ்ச்யிற்குள் வீழ்த்தப்பட்டவர்கள் தான் இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும்.

இதன் தொடர்சியாக இனங்களுக்குகிடையிலான முரண்பாடுகளை தமது தேர்தல் வெற்றியிற்காக இருதரப்பினரும் பெரும் தேசியவாதமும் குறும் தேசியவாதமும் பேசியே அரசியலை நகர்த்தும் போக்கே இலங்கையில் ஆதிகம் வகித்து வந்திருக்கின்றது வருகின்றது.
பூமிப் பந்தில் இலங்கையில் மட்டுமே சிங்கள் மொழி பேசும் மக்கள் வாழ்வதும் இலங்கையில் தாம் தமது இருப்பை கை கழுவும் நிலை ஏற்பட்டால் தாம் முற்று முழுதாக இல்லாமல் ஆகிவிடுவோம் என்ற உளவியல் தாக்கம் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பொதுப் போக்காக இருக்கின்றது. இதனால் பெரும்பான்மை சமூகத்தில் இருக்கும் இடதுசாரிகள் வலதுசாரிகள், ஜனநாயக சக்திகள் கூட சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்குவது என்பதை பௌத்த சிங்கள் மேலாதிக்க சிந்தனை என்ற மாயக் கண்டாடியினூடு பார்க்கும் நிலமைக்கு அவர்களைத் தள்ளிவிட்டது. இது நியாயமான பார்வை இல்லை. ஆனாலும் இதுவே யதார்த்தம். இந்த யதார்தத்தை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும்.

இந்த பயப்பிராந்தியை ஏற்படுத்த முழுச் சிறுபான்மை மக்களும் ‘தமிழர்கள்” என்ற அடையாளத்திற்குள் இலங்கை தவிர்ந்த பல நாடுகுளில் சிறப்பாக இந்தியாவின் தமிழ் நாடு போன்ற இடங்களில் அதிகம் இருப்பதுவும் அவர்களுடன் தமக்கான உறவு ‘தொப்புள் கொடி உறவு” எற்று பிரச்சாரப்படுத்துவுதும் வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது.

இந்த சிந்தனைகளின் ஓட்டமே இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களும் தொடரந்த சிறுபான்மை மக்கள் சிறப்பாக தமிழ் மக்கள் தமது உரிகைளை நிலை நாட்ட தனிநாடு வரை கோஷம் வைத்து ஆயுதம் ஏந்திய செயற்பாடுகளும் ஆகும். இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராட முடியாமல் பேரிவாதம் தனது வளர்ச்சியை கொண்டிருந்தது பிரிவனை வாதக் கோஷம் தவிர்க்க முடியாமல் போய்விட்ட பொதுப் போக்காக மாறிவிட்டது.
இந்த அரசியல் சூழலில் இலங்கையின் கேத்திர முக்கியத்துவத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்த முயலும் மேற்குலகம் ஐதே கட்சியின் ஜேஆர் ஜெயவர்தனாவிற்கு பின்பு அதேயளவு ஆதரவை தமக்கு வழங்கும் சர்வ வல்லமை கொண்ட ஜனாதிபதியை இலங்கையில் இன்று வரை உருவாக்க முடியவில்லை. அது போர் வெற்றியின் பின்பு தமது நாட்டிற்கு வருவதற்கான தடையை நீக்கி ஜனாதிபதி வேட்பாளராக மாற்றிய சரத் பொன்சேகாவின் வெற்றியாலும் உறுதி செய்ய முடியவில்லை.

கூடவே மகிந்த சகோதரர்களின் பாரம்பரிய சிறீலங்கா சுதந்திர கட்சியின் பண்டாரநாயக்கா காலத்திருந்து உருவான ஆதரவுத்தள சீன நட்பு செயற்பாடுகள் உலகெங்கும் அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் இலங்கையில் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு சிறீலங்கா சுதந்தி கட்சியை உடைத்து உருவாக்கிய நல்லாட்சியில் தாது எதிர்பார்த அளவிற்கு மைதிரிபால சிறிசேனா செயற்படுத்த முடியவில்லை என்ற ஏமாற்றம் மேற்குலகிற்கு உண்டு.
இந்த சூழ்நிலையில் பிரேமதாசாவின் மைந்தன் சஜித் தமக்கான ஜேஆர் இன் வெற்றிடத்தை நி;ரப்புவார் என்று மேற்குலகம் குதூகலித்த நிலையில் நடைபெறும் தேர்தலில் கோத்பாயாவின் வெற்றியும் தமக்கு உதவலாம் என்று இரு தோணியில் கால் வைக்கும் செயற்பாட்டுச் சூழலில் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகின்றது.

தமக்கான முழு ஆதரவு என்று உறுதி செய்யப்பட்ட சஜித் பிரேமதாச… ஆதரவு கிடைக்கலாம் என்ற நம்பிகை ஆனால் உறுதி செய்யப்படாத கோட்டபாய ராஜபக்ஷ என்ற இருவரில் யார் வென்றால் இலங்கையிற்கு நலம் என்பதை, மேற்குலகம் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் செய்த, செய்துவரும் ஆக்கிரமிப்புகளை எமக்கான பாடங்களாக நாம் கொண்டே இன்று நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

மறு புறத்தில் இடதுசாரி பாசறையில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்த ஜேவிபி ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் மூன்றாவது மாற்று சக்தி என்பதை முன்னிறுத்தி செயற்படுவதை விடுத்து கிடைகின்ற வகையில் இலாபம் என்ற வகையிலான செயற்பாடு மேற்குலகின் விருப்பை நிறைவேற்ற வாய்ப்பை அளித்துவிடலாம். ஏன் எனில் இந்த தேர்தலில் ஜேவிபியின் வாக்கு வங்கி பெருக்கம் பாரம்பரிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுத் தளத்திலிருந்துதான் வந்தேயாக வேண்டும் யூஎன்பியின் ஆதரவுத் தளத்தில் இருந்து அல்ல என்பதை நான் கவனத்தில் கொண்டேயாக வேண்டும்.

மேற் கூறிய வியங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டு பார்க்கப்பட்ட பார்வை. இதற்கு அப்பால் இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு யார் ஜனாதிபதியாக வந்தால் நல்லது அல்லது அரசியல் தீர்வு… சம அந்தஸ்து… என்று எல்லாம் பார்த்தால் சிங்களம், பௌத்தம் என்பதே முதன்மையானது என்ற சிந்தனை சிறுபான்யின மக்களை இலங்கையில் சம அந்தஸ்துடன் வாழ் அனுமதிக்க வரும்பாத நிலமையே சகல பெருபான்மை கட்சிகளிடத்தும் மேலோங்கி உள்ளது.

இடதுசாரியம் பேசும் ஜேவிபியும் தனது ஆரம்ப கால ஐந்து வகுப்புகளில் மலையக மக்களைப்பற்றி பார்வை அவர்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கூறுகள் என்ற வகுப்பையும் இணைத்துக் கொண்டதும், இதுவரை சிறுபான்மையினருக்கு சட்டரீதியாக கிடைத்த 13 வது திருத்த சட்டத்தை ஆதரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து சட்டம் அமுலுக்கு வந்த காலத்தில் அதற்கு ஆதரவாக செயற்பட்டவர்ளுக்கு எதிராக தெற்கில் ஜேவிபி வடக்கு கிழக்கில் புலிகள் செயற்பட்டதைபப் போன்று செயற்பட்டவர்கள்.

கூடவே புலிகள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை செயற்படவிடாமல் இல்லாமல் செய்ய மறுபுறத்தில் தற்கால வடக்கு கிழக்கு இணைப்பை நீதி மன்றம் வரை வென்று பிரித்த கைங்கரியத்தை செய்ததும் இதே ஜேவிபிதான். இலங்கையின் முதன்மையான அரசியல் பிரச்சனையான தமிழர் பிரச்சனையிற்கான அரசியல் தீர்வு பற்றி நகல் வரவு இன்றுவரை ஜேவிபி இடமும் இல்லாமல் இருப்பது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கட்சிகள் என்ற அடிப்படையில் ஐ.தே கட்சி கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக் கட்சித் சிந்தனை இடதுசாரிகளின் இணைந்த கூட்டணி, ஜேவிபி என்று பார்த்தால் முதலாவது கூட்டணியின் தோல்வியை உறுதி செய்யும் செயற்பாட்டிலேயே நாம் இறங்கியாக வேண்டும். நபர்களாக பார்த்தால் சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபக்ஷ அனுர குமார திசநாயக்கா என்ற மூவரில் எனது தெரிவு அனுர குமார திசநாயக்க.


எவை எப்படி இருப்பினும் இலங்கை மக்களின் ஜனநாயக செயற்பாட்டை நாம் மதித்தே ஆக வேண்டும். மக்களுக்கான உரிமைப் போராட்டம் தொடர்ந்து நடந்தாகவேண்டும். உரிமைகளுக்காக போராடுவது எமது வரலாற்றுக் கடமை