இலங்கை நிலவரம்: என்ன செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நாட்டில் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையும் பதட்டமும் நிலவுவதாக பார்க்க முடிகின்றது. எதிர்பை தெரிவிக்கும் மக்கள் கைகளில் நெருப்பு பந்தங்களை எண்ணை ஊற்ற எரித்த வண்ணம் வீதியில் இறங்கி இருப்பதுவும் பொது சொத்துகளை நாசப்படுத்துவதுமான நடைமுறைகள் அங்காங்கே காணப்படுகின்றன.

இந்த மக்களின் மனக் கொந்தளிப்புகள் உணரப்பட்டாலும்… இலங்கையில் சிறப்பாக 1970 களின் பிற்கூறுகளின் பின்னர் அதிகம் உருவான இராணுவ சிந்தனைப் போக்கின் வெளிப்படுத்தலுக்கு தீனி போடுவதாக இவை அமைந்து பாகிஸ்தான் போன்ற நாடுகள் போல் தினமும் கலவரம் நடைபெறும் கலவர பூமியாக இலங்கை மாறிவிடுமோ என்ற நியாயமான பயத்தினை இவை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவ்வாறான ஒரு நிலமை ஏற்பட்டால் அதிலிருந்து நாட்டை மீட்டு சகஜ நிலையிற்கு கொண்டு வருதல் கடினமானது என்பதை நாம் யாவரும் அறிவோம்.

அமைச்சர் அவை பதவி துறப்பும் கட்சி விலகல்களும் என்பதற்கு அப்பால்…..

தற்போதைய பொருளாதார சிக்கலை இலங்கையில் வாழும் யாரும் மிக இலகுவில் சகஜ நிலையிற்கு கொண்டுவர முடியாது என்பது யதார்த்தம் ஆனால் சரியான திட்டமிடலும் செயற்பாடும் அதுவும் இணைந்த ஐக்கியப்பட்ட செயற்பாடுகளும் சிறப்பாக இலங்கை வாழ் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதினால் சிறுக சிறு முன்னேற்றம் அடையச் செய்து நாம் மீட்டு எழ முடியும்.

மாறாக அரசியல் குரோதங்களும் தற்போது ஆளும் அரசின் மீது சிறுபான்மை இன மக்களுக்கு இருக்கும் கடந்த கால செயற்பாட்டினால் ஏற்பட்ட வெறுப்பின் அடிப்படையிலான செயற்பாடுகளும்… பெரும்பான்மை சமூகத்தில் அதிகம் ஆதிக்கம் வகிக்கும் கட்சிகளின் அரசாட்சிப் பசியும் என்றுமாக நகர்ந்தால் இந்த பொருளாத பிரச்சனைக்கு… பட்டினிச் சாவை நோக்கிய பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

முடிந்தவரை தற்போதைக்கு தேர்தல் என்று போகாமல் ஒரு இடைக்கால அரசு நிறுவப்பட வேண்டும.; இதில் சாத்தியப்படுமானவரை அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். அது தற்போதைய பொருளாதாரப் பிரச்சனையை முகம் கொடுத்து எவ்வாறு நாட்டை தாங்கி நிற்க முடியும் என்பதான முதன்மை வேலைத் திட்டத்தை கொண்டதான செயற்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

இதற்கு அந்நிய நாட்டுச் வருவாயை அதிகரித்ல் இதன் மூலம் அத்தியாவசிய உணவு மருந்து எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்தல். அதற்காக வருவாயை அதிகரிச் செய்யும் தொழில்களில் அதிக அக்கறையுடன் செயற்படுதலாக அது தேயிலை ஏற்றுமதி உல்லாசப் பயணத்துறை ஆடை ஏற்றுமதி மத்தியகிழக்கு போன்ற நாடுகள் தொழில் பார்க்கும் இலங்கையரால் ஈட்டபடும் வருவாயை அதிகரித்தல் கூடவே புலம் பெயர் தேசத்தில் அகதிகளாக்கப்பட்டு நிரந்தர குடிவாசிகளாக வாழும் மக்களின் பொருளாதார இணைவு என்று பயணப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட எமக்கான உணவை நாமே உறபத்தி செய்வதற்குரிய தற்சார்பு உற்பத்தியை பொருளாதாரத்தை அதிகரிக்கும் செயற்பாடுகள் அது விவசாயம் கடல் தொழில் போன்றவற்றில் சீரிய சரியான திட்டமிடல் செயற்பாடுகளை உருவாக்க வேண்டும். இதற்கு தேவையான பசளை கிருமி நாசினி என்பனவற்றை தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்குரிய சூழலை உருவாக்குதல் என்பதாக நகர வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் இலங்கை அரசின் தவறான பொருளாதரக் கொள்கை என்று 1970 களின் பிற்கூற்றில் இருந்து ஆரம்பித்த தாராளவாதம் என்பதில் இருந்து ஆரம்பித்தாலும் நாட்டில் நடைபெற்ற யுத்தம் அது தொடர்பான செலவீனங்கள் இன்றுவரை தொடர்வதும் அனைத்து இனங்களையும் சகோதரர்களாக இணைத்து நாட்டை கட்டியெழுப்பாத அரசு பேரினவாதத்தின் செயற்பாடுகள் என்பனவாக நீண்டாலும் கடந்த 2 வருடங்களாக உலக உலுக்கும் கொரனா பேரிடல் பொருளாதாரச் சிக்கல்களும் அண்மைய உக்ரேன் ரஸ்யா யுத்தமும் காரணமாகின்றது.

கூடவே தற்போது ஆட்சியில் இருக்கும் அரசின் திறமையற்ற செயற்பாடுகளும் அரசியல்வாதிகளிடம் நிலவும் ஊழலும் முக்கிய காரணமாகின்றது. கூடவே இவற்றை தடுத்து நிறுத்துவதற்குரிய எதிர்கட்சிகளின் செயற்பாடுகள் திறமையற்று இருந்ததும் காரணமாகின்றன.

இவை எல்வாற்றிற்கும் அப்பால் சர்வ தேச நாடுகளின் சதுரங்க ஆட்டம் அது வெளிப்படையாக சீனா என்று குற்றம் சாட்டப்பட்டாலும் பாகிஸ்தான் தென் அமெரிக்க பெரு நாடு போன்றவற்றில் ஏற்பட்டுவரும் விடயங்களை வைத்து உலக ஒழுங்கில் அணிசேரும் நேட்டோ நாடுகள், நேட்டோ அல்லாதவர்கள் என்று நாடுகளை மேலும் திவாலாக்கும் குழி பறிப்புகளும் இருப்பதாக உணரப்படுகின்றது. இந்த உலக அரசியல் வேறு ஒரு தளத்தில் விரிவாக பார்ப்போம்.

தற்போதைய நிலமையை சிறப்பாக கையாளத் தெரியாத தற்போதைய அரசு அதன் தோல்வியில் நின்று கொண்டிருக்கின்றது என்தற்காக இலங்கை மக்கள் தோற்றுப் போகக் கூடாது… வாழ வேண்டும்….

பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் இணைந்து நாட்டை மீட்டு கட்டியெழுப்புதலில் இணைந்து செயற்பட வேண்டும். இதற்கு பெரும்பான்மை மக்கள் கட்சிகளிடம் இருந்து சகல மக்களுக்கும் சிறப்பாக தமிழ் பேசும் மக்களுக்கான சம உரிமைகளை நிலை நிறுத்தும் அரசியல் தீர்வும் எற்பட்டு அது வழங்கப் பட வேண்டும் என்ற புரிதலும் செயற்பாடும் தற்போது முன்பு எப்போதையும் விட உணரப்பட வேண்டிய காலமாக இருப்பதை சாதகமாக்கி இணைந்து பயணித்தால் நாம் எல்லோரும் வாழுவோம் குரோதங்களை மறப்போம் சகோதரத்துவத்தை வளரப்போம் சகலரும் சம உரிமை பெற்று வாழ்வோம்.