கூலியின் தோல்வியும் வேலியின் தோல்வியும்

இதில் லோகேஸ் கனகராஜ் வில்சன் அட்லி என்று சீரழியும் தமிழ் சினிமாவில் இறுதியில் கண்டது பான் இந்தியா படம் என்று கூறிக் கொண்டு அந்த ஆயிரம் கோடியை சமான்ய மக்களிடம் வசூலித்ததை தவிர வேறு எதும் நடைபெற்றதாக உணர முடியவில்லை.

இதற்கு தமிழ் படம் பார்க்கும் டாலர் நாட்டு வியாபாரமும் உள் நாட்டில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களுக்கு அல்லது சாதாரண பொழு போக்குப் படங்களுக்கும் சினிமா கொட்கைகள் கிடைக்காதா நிலையில்….

இந்த கோடிகளில் எதிர்பார்ப்பை எகிற விட்டு படத்தைக் காட்டாமலே செலவிற்கு மேலாக இலாபத்தை வசூலிக்கும் சினிமா வியாபாரம் எந்த வகையிலும் ஏற்புயைது அல்ல. இதற்குள் இருக்கும் கறுப்பை வெள்ளையாக்கும் கள்ளச் சந்தையைத் தவிர.

இப்படி எழுதினால் இந்த திரைப்படத் துறையை வைத்து பல ஆயிரம் குடும்பங்கள் சீவிக்கின்றன என்று வேலையை வழங்குவதாக தியாக சமாதானம் பேசுவார்கள்.

போங்கடா உதை விட்டிட்டு ‘விதையுங்கள் அறுவடை செய்யுங்கள் பசியும் ஆறும் உற்பத்தியும் பெருகும்’ உலகின் அதி சனத்தொகை நாட்டில் பெரும்பான்மை மக்கள் வாழவும் வழி பிறக்கும்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் இந்த கனகராஜ்களும் சுப்பர் ஸ்ரார்களும் ‘திறமை’யானவர்களாக இருக்கலாம் தமக்கான பணம் பண்ணுவதில் மக்களின் நலன்களின் அடிப்படையில் அல்ல.

இது இந்தியாவின் தமிழ் நாட்டில் என்றால்…. இலங்கையின் தனி நாட்டில்…

வட்டுக் கோட்டையில் எமக்குள்ளேயே இன்னமும் ஆதிக்கம் செலுத்தும் சாதிக் கொடுமைகளாக இரண்டிற்கு மேற்பட்ட தடவை நடைபெற்ற ஒடுக்கு முறைக்கு ஆதரவாக செயற்பட்ட பொலிசாரின் செயற்பாட்டிற்கும் சமூகத்தில் நீதியை உருவாக்க சமூக நீதியை நிலை நாட்ட ஆக்களை அனுப்பி கடையை அடைத்து ஹர்த்தால் செய்து போராட்ட நடத்தி இருக்க வேண்டும்.

இதற்கு எந்த கவனத்தையும் செய்து ஈர்ப்புப் போராட்டமும் நடத்தவில்லை தமிழ் பிரதான ஓட்டக் கட்சிகள்.

மாறாக உசுப்பேத்தும் வேலையாக ‘வேலி தாண்டி?’ இல்லாமல் போகும் இராணுவ முகாமின் பொருட்களை பங்கிடப் போனதில் ஏற்பட்ட தகறாறு கொலை அளவிற்கு சென்ற நிலையில் கொழும்பு மனேகணேசன் வகையறாக்களும் இணைந்து எதிர்ப்பை பத்திரிகையில் பதிவு செய்துள்ளனர். நல்லது.

இதில் முஸ்லீம் காங்கிரசும் சேர்ந்துள்ளதாம்….

கிழக்கில் உள்ளுர் ஆட்சியில் பங்காக இணைக்க உதவியதற்கு நன்றிக் கடனோ இது என்றும் எண்ணத் தோன்றுகின்றது

கூட்டுக்களவாணியாக செயற்பட்டிருக்கலாம் என்பதாக அறியப்படும் இதற்கு முழு நாள் கடையடைப்பு என்று ஆரம்பித்து வர்த்தக சங்கங்கள் ஓத்துழைக்காத நிலையில் அரை நாள் லீவு எடுக்கும் நிலையும் ஏற்பட்டுவிட்டது தற்போது.

ஆளும் அரசு இந்த ‘கொலை’ மரணம் நடந்த உடன் முன்னைய அரசுகள் போலல்லாது சம்மந்தப்பட்ட இராணுவதினரை கைது செய்து நீதி மன்றம் வரை பிரச்சனையை நகர்த்தி நாட்களும் ஆகிவிட்டது.

எந் நிலையிலும் அந்த மரணம் ஏற்புயைது அல்ல.

ஆனால் அரசு அதனை நியாயப்படுத்தாமல் உரிய சட்ட நடவடிக்கையை சிவில் நிர்வாக பொலிஸ் நீதிமன்றம் என்றாக நகர்ந்த பின்னரும் ஹர்த்தால் என்றால் இதற்கு என்ன அர்த்தம். சமான்ய மக்களின் அன்றாடம் தொழில் செய்யும் மக்களின் நிலை என்னாகும்…?

ஹர்த்தால் சரியா பிழையா என்பற்கு அப்பால் தாம் எது சொன்னாலும் மக்கள் சங்கங்கள் ஏற்றுக் கொள்ளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஏக மேலாதிக்க மன நிலையிற்கு கிடைத்த தோல்வியாக பாடமாக இதனை தமிழ் அரசு எடுத்தாக வேண்டும். இந்த அரை நாள் ஹர்த்தால் லீவு என்பது இதனை வலுவாக சொல்லி நிற்கின்றது இந்த வேலியின் தோல்வியில் இதுவும் ஒன்று.

அரசின் ஐனாதிபதிக்கும் இது பற்றி சம்பவம் நடந்த உடனேயே கடிதம் அனுப்பியாச்சு. அது சரியான செயற்பாடுதான். இதற்கு மேல் ஹர்த்தால் என்பது எனது தோழன் சொல்வது போல்…..

போராட்டத்தில் நியாயமும் நேர்மையும் பற்றுறுதியும் இருந்தால் ஒருநாள் இழப்பை எம்மால் தாங்க முடியும். மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் தாக்கியவர்கள் நாம்.

இழந்துள்ள தனது செல்வாக்கையும் அதனால் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சமாளிக்கும் போர்வையில் எம்மை இன ரீதியில் பிரித்து எமது உரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் கபட நாடகத்திற்கு நாம் துணைபோகலாமா? சுமந்திரன் கட்சியின் அறைகூவலை இப் பின்னணியில் ஆராய்வதே பொருத்தமானது.