தற்போது இந்த விடயங்கள் பற்றி வெளிவந்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களிலும் அந்த காலத்து – பத்திரிகை ஆவணக்காப்பகங்களிலும்- noolaham.org – Google – ChatGPT – DeepSeek – போன்ற தேடல் தளங்களிலும் தேடி அறியலாம்.)
1983 ஜூலை கலவரத்தை தொடர்ந்து – தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் தங்களுக்கு யாழ் பல்கலை கழகத்தில் கல்வியை தொடர அனுமதிக்கும்படி கோரி ஒன்பது மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். புலிகள் இயக்கத்தினர் – “உண்ணாவிரத போராட்டம்” இந்த அடக்குமுறை அரசிற்கெதிராக பயனற்றது என்று – துண்டுப்பிரசுரம் வெளியிட்டு- உண்ணாவிரதமிருந்த மாணவர்களை இந்தியாவிற்கு 16-01-1984 அன்று கடத்தி சென்று உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.
1984 இல் உண்ணாவிரத போராட்டம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு இதுவே.
பின்னர் 22-11-1986 அன்று தமிழ் நாடு அரசு – இயக்கங்களில் அழுத்தம் கொண்டுவருவதற்காக – அனைத்து தொடர்புசாதனங்களையும் கைப்பற்றிய வேளையில் – பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். அதன் விளைவாக – கைப்பற்றிய சாதனங்கள் மீண்டும் கொடுக்கப்பட – உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். உண்ணாவிரதம் பற்றி புலிகளின் நிலைப்பாடு 1986இல் இப்படி இருந்தது.
15-09-1987 இல் திலீபனின் – (ராசையா பார்த்திபன்) உண்ணாவிரதம் – 38 வருடங்களின் பின்னர் இன்றும் பேசுபொருளாக இருகின்றது. அப்போது யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்த உண்ணாவிரதம் ஏற்படுத்திய உணர்வலைகள் -தாக்கங்கள் – நன்கு தெரியும். அதனைக் குறைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் உண்ணாவிரதம் பற்றிய புலிகளின் நிலைப்பாடு முன்னைய இரண்டு தடவைளையும்விட இந்தவிடயத்தில்
வித்தியாசமானதாக இருந்தது – கவனிக்கப்பட வேண்டியது.
அந்த காலகட்டத்தில் – இலங்கை – இந்திய அரசுகள் – புலிகள் இயக்கத்தினருக்கிடையே இடையே நடைபெற்ற அரசியல் நகர்வுகள் – பின்னணிகள் பற்றிய தகவல்கள் நினைவுபடுத்தவேண்டிய தேவை உள்ளது.
முக்கியமாக – உண்ணாவிரதத்தின் அடிப்படை கோரிக்கைகள் என்ன? நோக்கங்கள் என்ன?அதற்குப்பின்னால் இருந்த அரசியல் வியூகம் என்ன? அதனால் ஏற்பட்ட விளைவுகள் தாக்கங்கள் என்ன? என்பதை முழுமைjயாக உணர்வதற்கு – விளங்கிக் கொள்வதற்கு – முதலில் தெரியவேண்டியது உண்ணாவிரதத்திற்கு முன்னும் பின்னும் நடந்த மிக முக்கிய தொடர் சம்பவங்களின் தொகுப்பு.
அதனை சுருக்கமாக தொகுப்பதும் இந்த குறிப்புக்களின் நோக்கம்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை தொடர்ந்து – இந்திய அரசு – புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் அரசியல் – இராணுவ உதவிகள் – TULF தலைவர்களுக்கு புகலிடம் – என்று பலவழிகளில் இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்ததுடன் இந்திய அரசு பிரதிநிதிகளை (G .பார்த்தசாரதி – 25- 08-1983 )- நேரடியாக அனுப்பி தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பான முயற்சிகளை ஆரம்பித்தது.
இந்திய அரசின் நேரடித்தலையீட்டிற்கு முதன்மையான காரணம் – 1977இல் JR பிரதமராக தெரிவு செய்யப்பட்டத்திலிருந்து JR எடுத்த நிலைப்பாடும் – அப்போது நிலவிய பூகோள அரசியல் சூழலும் –
இரண்டாவது காரணம் – 1983ம் ஜூலை கலவரத்தை தொடர்ந்து தமிழ் நாட்டில் எழுந்த உணர்ச்சி பூர்வமான பாரிய எதிர்ப்பலையும் அதன் பின்னாலுள்ள – கருணாநிதி – MGR – காங்கிரஸ் – இன் – தமிழ்நாட்டு அரசியலுமே.
பின்னர் திம்பு – டெல்லி- கொழும்பு என பல சுற்று பேச்சுக்கள் – 1985-1986 இல் – அதிகார பரவலாக்கம் தொடர்பாக இடம்பெற்றன. இந்த பேச்சு வார்த்தைகளின் இறுதியாக 1986 ஆம் ஆண்டு ஜூலை – ஆகஸ்ட் இல் TULF தலைவர்கள் இந்திய அரசின் அனுசரணையுடன் – கொழும்பில் – JR அரசுடன் நீண்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி- அதிகாரப்பரவலுக்கான அடிப்படைகளை – நிர்மாணித்தனர்.
இதுவே இன்றைய மாகாண சபை முறைமைக்கு அடிப்படையாக இருக்கிறது.
அதேவேளை – இந்திய அரசு- தமிழக முதல்வர் MGR இன் அனுசரணையில் – பிரபாகரனும் – பாலசிங்கமும் – பெங்களூரில் நடைபெற்ற – தெற்காசிய பிராந்திய தலைவர்கள் (SARC ) மகாநாட்டிற்கு நவம்பர் 1986இல் – கூட் டிச்செல்லப்பட்டு – JR உடன் நேரடியாக பேசினார்கள். (ஈழநாடு 18-11-1986) தொடர்ச்சியாக MGR ம் – இந்திய அரசும் பிரபாகரனுக்கு தேவையான உதவிகளை- செய்ததுடன் அரசியல் ரீதியிலும் முக்கியத்துவம் கொடுத்தே வந்தது.
பிரபாகரனும் – புலிகள் இயக்கமுமே – இந்திய ஆட்சியாளர்களின் – அதிகாரிகளின் முதற் தெரிவாக இருந்தது. இந்திய பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோர் தமிழ் தலைவர்களிடம் நேரடியாக பலமுறையும் – அதிகாரிகளூடாகவும் – இலங்கையில் பிரிவினையை ஆதரிக்க மாட்டோம் என்பதை தெளிவாகவே சொல்லி வந்திருக்கிறார்கள்.
இவற்றை அறிந்துகொண்டே புலிகளும் ஏனையோரும் – சகலவிதமான உதவிகளையும் பெற்று வந்தனர்.
அதேவேளையில், 1983ம் ஆண்டு தொடங்கிய – ஆயுதப் போராட்டம் – 1986 இல் பலத்த பின்னடைவை சந்தித்தது.- LTTE சகோதர யுத்தத்தை ஆரம்பித்து – EPRLF – TELO – மீது படுகொலைகள் – PLOTE செயற்பாட்டை நிறுத்தியது – EROS புலிகளுடன் இணைந்து கொண்டது.
1987 ஜனவரி யில் பிரபாகரன் – நீண்டகாலத்திற்குப் பின்னர் நாட்டிற்கு திரும்பினார். பாலசிங்கம் சென்னையிலேயே தங்கியிருந்தார். இந்திய பாதுகாப்பு துறையும் தொடர்ச்சியாக புலிகளுடன் தொடர்புகளை பேணி வந்தது.
அப்போது யாழ்ப்பாணத்தில் – LTTE தனியான ஆயுத இயக்கமாக – இருந்தது. அதனது முதன் நிலை தலைவர்களாக – மாத்தையா – கிட்டு – திலீபன் – யோகி- திலகர் -ஆகியோரே பத்திரிகைகளால் அறியப் பட்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பிரபாகரனை தலைவராக ஏற்றுகொண்டாலும் – அடுத்த முக்கியத்துவம் பற்றிய போட்டி – கிட்டு – மாத்தையா விற்கிடையே இருந்தது.
அதேவேளை அரசியற் துறை பொறுப்பாளர் என்று கூறப்பட்டாலும் – திலீபன் -முழுமையான அர்ப்பணிப்புடனான- ஆயுதம் தரித்த – புலிப் போராளியாகவே யாழ் மக்களால் அறியப்பட்டவர்.
(தொடரும்….)