போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் இவர்களா…?

ஆனால் அரசியலைத் தவிர்து ஆயுதங்களை அதிகம் காவி எனைய அமைப்பினரை கொலை செய்த கிட்டுவிற்கு போட்டியாக ரெலோ ஐ அழிக்க முற்பட்ட போது செயற்பட்டவர்.

இதற்குள் கிட்டுவை ஓரம் கட்ட பிரபாகரனின் அன்றைய குத்து வெட்டு அரசியலின் செயற்பாட்டு உறுப்பினரும் இவர்தான்.

1986 மே மாதத்தில் நேரடியாக ஏனைய இயக்கங்களை தடை செய்தல் என்றான புலிகளின் செயற்பாட்டிற்கு தீலீபனுக்கும் புலிகளின் அரசியல் துறை என்பதற்கு அப்பால் அன்றைய யாழ்ப்பாண புலிகளின் இராணுவத் தளபதி கிட்டுவை அகற்றுதல் என்ற பிரபாகரன் இந்தியாவில் இருந்து எடுத்த உள் குத்து செயற்பாட்டிற்கு விசுவாசமாக மிகவும் ஆக்ரோசத்துடன் மாற்று இயங்கங்கள் மீது கொலைகளைச் செய்து முடித்தவர்.

அவரை உணாவிரதம் இருக்கச் செய்து அதிலிருந்து எழுந்திருக்க முடியாதபடி சாகடிக்கப்பட்ட ‘…தம்பி நீ முன்னுப் போ அண்ணை நான் பின்னால் வருகின்றேன்…’ என்றாக “தேசிய’த் தலைவரால் காவு கொடுக்கப்பட்டதால் காந்தி ஆகி விட முடியுமா என்றால் இல்லை என்பதே பதில்.

கொலைகள் மூலம் தான் கிட்டுவிற்கு குறைந்தவன் அல்ல என்பதை நிரூபிப்பது என்பதுதான் 1986 இல்ல இருந்து உண்ணாவிரதம் இருந்து சாகடிக்கப்படும் வரை திலீபனின் அரசியல் துறைச் செயற்பாடுகள் ஆகும்.

அன்றைய கால கட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்தொழிப்பதற்கும் அது சார்ந்து அந்த அமைப்பின் போராளிகளை தேடி அழிப்பதில் கிட்டுவிற்கும் திலீபனுக்கும் இடையில் யாழ் குடா நாட்டில் மிகப் பெரிய போட்டியே நிலவியது.

சிறீ சபாரத்தினம் கட்டைபிராய் பகுதியில் இருந்து தப்பி திருநெல்வேலி தபால் பெட்டி ஒழுங்கை வழியாக யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் பின்புறமாக அமைந்து ஈரோஸ் அமைப்பின அன்றை இராணுவத் தளபதி சண் வீட்டில் ‘….எங்களைக் காப்பாற்றுகள்…’ என்று ஒடி வந்து தஞ்சம் மடைந்த நேரத்தில் அவர்களை கொல்வதற்காக வெறி நாய் போல் துவக்குகளுடன் துரத்தியவர் கிட்டன் அல்ல திலீபன் தலைமையிலான குழுவினரே.

அதற்கு முன்பே சிறீ சாபாரத்தினம் மோகன் பொபி போன்றவர்கள் ‘ எம்மால் ஒன்று செய்ய முடியாது…’ என்ற ஈரோசின் உதவியுடன் அங்கிருந்து தப்பி ஆடியபாதம் வீதியை தாண்டி கோண்டாவில் பக்கமாக நகர்ந்தும் விட்டனர்.

ஆதனால் சிறீ சபாரத்தினத்தின் கொலை அன்று நடைபெறாமல் போனது. அது பிறப்பாடு கிட்டனால் நிகழ்த்தப்பட்டது

இதற்கான நேரடிச் சாட்சியாகவும் நாமும் அப்போது அங்கு இருந்தோம்.
இடதுசாரிகள் அண்ணாமலை, விஜயானந்தன் தொழிற்சங்க செயற்பாட்டில் போராட்டங்களில் ஈடுபட்டதினால் ஏற்பட்ட கோவத்தினால் அவர்களின் கொலையில் திலீபனின் நேரடி உத்தரவு இருந்திருக்கின்றது.

உரும்பிராய் சந்தியில் இருந்து இந்த தொழிற்சங்கவாதிகளும் பல பொது அமைப்புக்களும், நல்லூரில் இருந்து விடுதலை அமைப்புக்களின் கூட்டமைப்பும் ஒரே கோரிக்கையிற்காக ஊர்வலங்களை நடாத்தி திருநெல்வேலிச் சந்தையில் இணைந்து யாழ் பல்கலைக் கழகத்தில் கூட்டத்துடன் முடிவுற்ற சில தினங்களில் இந்த கொலை நடந்தது.

விடுதலை அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைந்து இந்தப் போராட்டம் நடாத்துவதற்காக நடைபெற்ற கூட்டங்களில் தீலீபனும் நானும் இன்னும் பல்கலைக் கழ மாணவர்தலைவர்கள் ஏனைய விடுதலை அமைப்புகளும் இணைந்து கலந்துரையாடிய போது … இதே விடயத்திற்காக ஏற்கனவே தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு இதே போராட்டத்தை அதே திகதியில் அறிவித்து ஆயத்தங்கள் செய்கின்றனர் என்ற கருத்துப் பரிமாறப்பட்டது.

‘…தொழிற்சங் வாதிகள் அவ்வாறு செய்ய முடியாது…’ அவர்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை தாம் செய்வதாக திலீபன் கூறி கூட்டதை மீண்டும் மாலையில் நடாத்துவோம் என்ற நிலையில் மீண்டும் மாலையில் கூடிய போது அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாக திலீபன் கடும் சினத்துடன் கூறியதற்கு நானும் சாட்சி.

இந்த கூட்டங்களில் எல்லாம் சுலோகங்கள் பானர்கள் என்றால் எங்களையும் ஈரோசையும் பார்த்து ஏளனமாக அவர்கள் அதனைச் செய்வார்கள் என்றும் பணம் வாகனம் என்றால் தாம் செய்கின்றோம் என்றான அரசியல் வறுமையை அவர் தனது கருத்துகளிலும் தெரிவித்திருந்தார்.

இதன் பின்பு ஒரு உடன்பாட்டின் அடிப்படையில்தான் இரு வேறு வேறு இடங்களில் இருந்து அரம்பித்து இறுதியில் ஒரு சந்தியில் ஊர்வலங்கள் ஒருங்கணைந்து பின்பு பல்கலைக் கழகத்தில் முடிவுற்றது போராட்டம்.
இறுதியாக ஒரு தொழிற்சங்கவாதிப் பிரதிநிதி, ஒரு பெண் உறுப்பினர், ஒரு விடுதலை இயக்க கூட்டமைப்பின் பிரதிநிதி என்றாக பேச்சுகள் நடைபெற்று போராட்டம் முடிவுற்றது.

தொழிற்சங்க கூட்மைப்பு ஈழவிடுதலைப் போராட்ட காலத்தல் எந்த விடுதலை அமைப்பையும் சாராது தம்மளவில் தொழிலாளர் நலன்கள் சார்ந்து நடாத்திய ஊர்வலத்தை கைவிட வேண்டும் என்று திலீபன் தலமையில் வெருட்டிய போது…

‘…நாம் இது பற்றி முதலில் தீர்மானித்து ஓழங்குகளை செய்துவிட்டோம் விடுதலை அமைப்புகளின் கூட்டமைப்பும் நடாத்தட்டும் நாங்களும் திட்டமிட்டபடி நடாத்துகின்றோம பின்பு ஒரிடத்தி இரு ஊர்வலங்களும் இணைந்து யாழ்ப்பல்கலைக்கழகத்தில் ஒரு நிறைவுக் கூட்டதுடன் போராட்டத்தை முடிப்போ….’ என்ற தொழிற்சங்கங்களின் ஆலோசனைப்படியே எல்லாம் நடைபெற்றன.

ஆனால் திலீபன் தலமையிலான புலிகளின் சொல்லை கேட்கவில்லை என்பதாகவே அண்ணாமலையும் விஜயானந்தனும் சில தினங்களில் புலிகளால சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தமது பேச்சை மறு பேச்சின்றி கேட்காத மறுவார்த்தை கதைதவர் என்பதாக அண்ணாலையும் விஜயானந்துனம் கொல்லப்பட்டார்கள். அதிபர் ஆனந்தராஜா போல்.

இயக்கங்களை தடை செய்ய முன்பே இதுதான் புலிகளின் நீதி இவ்வாறுதான் இருந்தன. இதில் அன்றைய யாழ் மாவட்ட அரசியல் துறை, இராணுவப் பிரிவு என்றாக திலீபன் கிட்டுவின் செயற்பாடுகள் இருந்தன.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் இடுபையடிச் சந்தி அலுவலகத்தில் வடபகுதித் தலைவர் மத்திய குழு உறுப்பினரை தனது ஆட்களை அனுப்பி கொலை மிரட்டல் செய்தவரும் இதே திலீபன்தான்
இப்படி பலதையும் அடுக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பாசிச இயக்கமாக எல்லா செயற்பாடுகளை கொண்டிருந்த அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர் திலீபன்

மாற்றுக் கருத்துக்களை மறுதலித்து அதனை துப்பாக்கி முனையில் பதில் கொடுத்தவர்கள். பன்முகத் தன்மை கொண்ட மாற்றுக் கருத்தாளர்களை அவர்கள் எப்போது ஏற்பதில்லை. அதன் வெளிப்பாடுதான் ஏக பிரதிநிதித்துவம் என்றாக எல்லா அமைப்புகளையும் புலிகள் தடை செய்தது.

இதன் பின்பு இலங்கை இந்திய ஒப்பந்தம் இந்திய சமாதானப் படை ஆயுத ஒப்படைப்பு என்றாக மீண்டும் ஏற்கனவே புலிகளின் தடையிற்கு உள்ளாகி இருந்த பல ஈழ விடுதலை அமைப்புகள் அரசியல் கட்சிகளாக செயற்பாட்டாளர்களாக மீண்டும் தமிழ் பிரதேசம் எங்கும் செயற்படுவதை தடை செய்ய புலிகளால் உடனடியாக முடியவில்லை.
இந்தி அமைதிப்படையின் பிரசன்னம் இதற்கு பெரிய இடைஞ்சலாக இருந்து.

தமது ஏக போக செயற்பாடு மாற்று விடுதலை அமைப்புகளின் செயற்பாடுகளை செயற்பட விடாமல் தடுப்பதற்கு இந்தியா முழுமையாக தமது பக்கம் நிற்கவில்லை என்பதனாலே புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையை ஆரம்பித்தனர்.

இதற்கு வேறுவிதமாக கதை வசன நடையெழுத பலர் இன்றும் முற்படலாம் ஆனால் இதுதான் உண்மை. பன்முகத் தன்மையை அங்கீகரிக்காக ஏக தலமை என்ற சிந்தனையே இந்திய இராணுவத்துடனான மோதலின் புலிகளின் சித்தாந்தம்.

ஏனைய எந்த விடுதலை அமைப்புகளும் தனியாக இயங்க முடியாது தாம் மட்டும்தான் வடக்கு கிழக்கில் செயற்பட முடியும் என்றான நிலை ஏதோ ஒரு வகையில் இந்தியாவோ இலங்கை அரசோ உருவாக்கி இருந்தால் இந்தியாவுடன் சண்டையும் இல்லை இலங்கையுடன் உறவும் சண்டையும் இல்லை என்றாகவே நகர்ந்து இருக்கும் அன்று.

1986 டிசம்பரில் ஈபிஆர் எல்எவ் ஐ புலிகள் தடைசெய்த போது ஈபிஆர் எல்எவ் இன் ஆயுதங்கள் தேடி அலைந்ததை விட அவர்களின் அறிவியல் தததுவார்த்து புத்தகங்கள் சிவப்பு புத்தகங்களை தேடி சந்திகளில் குவித்து எரித்ததே அதிகம். அது தற்போதைய திலீபன் சிலை அமைந்த நல்லூரில் அதே இடத்தில் அதிகம் எரிக்கப்பட்டன. இவற்றையும் அதிகம் செய்தவராக அந்த அமைப்பில திலீபனே செயற்பட்டார். புலிகளின் அரசியல் துறைக்கு இந்த அறிவியல் மீது அவ்வளவு வெறுப்பு

இந்த எல்லா செயற்பாடுகளுக்கும் தீலீபனுக்கு பாரிய பங்கு உண்டு.

காந்தி உண்ணாவிரம் இருந்தார் பன்முகத் தன்மை ஆதரித்ததால் முஸ்லீம்கள் இந்துகள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் இணைத்தார்.

ஆனால் புலிகள் அதன் முதன்மை உறுப்பினர் திலீபன் முஸ்லீம்களை தமக்கு கீழானவர் நம்பிக்கைகுரியவர்கள் அல்ல என்று காலக்கெடு விதித்து வடக்கில் இருந்து வெளியேற்றி கிழக்கில் வகை தொகையில்லாத கொலை செய்வதில் பொறுப்புக் கூற வேண்டி நிற்பவர்.

இப்படியான ஒருவர் உணவு உட் கொள்ளாதாது மரணமடைந்தார் என்பதற்காக ‘பெருமைக்குரியவர்…. போற்றுதலுக்கு உரியவர்..’ என்று யாராவது பேச முற்படுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல

அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முயற்சிப்பது அதனைத் தடுப்பது இத்தனை தவறுகளைச் செய்தவர் எங்களுக்குதான் உரிமையுடையவர்கள் என்று காரணம் சொல்பவர்களும் அதனைப் பெருமையாக கொண்டாடினால் அதனை அவர்களிடம் விட்டுவிட்டு விலகிப் போவதே தவற்றை அம்பலப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.

உண்ணாவிரதம் என்பதற்கான கோரிக்கைள் என்பதை விட அதிகாரப்பரவலாக்கம் அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பதாக 13 வது திருத்தச்சட்டம் மாகாணசபையை முழுமையாக நிராகரித்து அதில் இருந்து அல்ல இடையில் இருந்து அதனை செயற்படவிடாமல் செயற்பட்டதில் திலீபனின் சாகும் வரை உண்ணாவிரதம் முக்கிய பங்காற்றுகின்றது.

தெற்கிலும் ஆயுத முனையில் இதே மகாணசபை ஆதரித்தவர்களை செயற்பாட்டை தடைசெய்யப்பட்டதே வரலாறு.

இலங்கையில் அரசியல் அமைப்பில் இருக்கும் இந்த விடயத்திற்கு எதிராகவே திலீபனின் உண்ணாவிரதக் கோரிக்கை மரணம் நடைபெற்று இருக்கின்றது.

இலங்கை அரசியல் சாசனத்தின் மீது சத்தியப் பிரமாணம் செய்து அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனாவர்கள் அரசியல் சாசனத்தை மதிக்காது அதனை நிராகரித்து உண்ணவிரதம் இருந்து குழப்பங்களை விளைவித்து முள்ளிவாய்கால் வரை அதிக இறப்பிற்கு காரணமானவரை நாம் எவ்வாறு போராளி தியாகி என்று கொண்டாட முடியும்
1990 இற்கு பின்னரான அனைத்து அழிவுகளுக்கு திலீபனின் உண்ணாவிரதம் மரணம் முக்கிய திருப்புமுனைக் காரணமானது… அது காரியம் ஆக்கப்பட்டது.

இவ்வளவு விடயங்கள உடைய ஒருவரை போராளி அவரின் தியாங்களை மெச்சுகின்றோம் என்றான செயற்படுதல் அரசியல் வறுமை வங்குரோத்துத்தின் வெளிப்பாடுகளாக உணரப்படுகின்றது.
மற்றவர் சாந்தன் தமிழ் நாட்டில் ஈழப் போராளிகளின் மரணத்தில் நேரடிப் பங்கு வகித்தவர் அதிலும் தோழர் பத்;மநாபாவின் கொலை இவர் இன்றி கச்சிதமாக நடைபெற்று இருக்க முடியாது.

இலங்கை முழுவதற்குமான புரட்சி வர்க்கப் புரட்சி என்றாக ஈழவிடுதலைப் போராட்டம் என்பது அதன் முதற்படி என்றாக தமது விடுதலைப் பயணத்தை தொடர்ந்து இடதுசாரி தோழர் நாபாவின் மரணத்தின் சூத்திரதாரி இவர்.

இவரை வணக்கத்துக்குரியவர் மரியாதைகுரியவர் என்றான அணுகுமுறையாக பார்த்தல் நீண்ட அரசியல் பாரம்பரியம் வரலாற்றை அனுபவங்களை உடையவர்கள் தெரியாமல் செய்துவிட்டோம் என்றாக நகர்ந்து போக முடியாது .

வெல்லுவது போல் தோன்றும் குதிரையில் காசைக கட்டும் அரசியல் அணுக முறை அது உங்களையே நின்று கொல்லும் என்பதை உணருவதற்கு காலம்தான் தேவை எனில் உங்களையும் வரலாறு விடுதலை செய்யாது .

உங்களின் நேச சக்திகள் நீங்கள் வணக்கம் தெரிவிப்பவர்களாக நிச்சயம் இல்லை என்பதை மட்டும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

தோராயமாக 50 வருட அரசியல் வரலாற்றை போராட்ட வரலாற்றை உடையவர்களுக்கு ஈழவிடுதலைப் போராளிகளின் போராட்ட வரலாறு கூறி நிற்கும் உண்மை இதுதான் .