ஒரு போரில் இருதரப்பும் வெற்றி பெறப்போவதும் இல்லை அழிவுகளே இறுதியில் எஞ்சி இருக்கும். இவை உண்மையாகி இருக்கும் நிலையிலான போர்களே தற்போது அதிகம் நடைபெறுகின்றன.
தேவையற்ற வளங்களைத் தீருடுவதற்கான திருடர்களின் யுத்தமாகவே இவை அதிகம் நகர்த்தப்படுகின்றன.
ஆனால் ஒரு மக்களின் வாழ்வை முன் நிறுத்தும் சித்தாத்தத்தின் அடிப்படையினான போர்கள் போராட்டங்கள் சமூக மாற்றங்களுக்கான வெற்றிகளாக எழுந்து வருதலை செய்யும் செய்திருக்கின்றது என்பதுவும் உண்மைதான்.
அதுதான் ஒரு தேசத்திற்குள் நாட்டிற்குள் நடைபெற்ற போராட்டங்கள் ஆட்சி மாற்றம் என்பதற்கு அப்பால் சமூக மாற்றத்திற்கான ஆட்சியை உருவாக்க நடைபெற்ற புரட்சிகளும்’ வெற்றியாக்கப்பட்டன.
மேலும் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் அதுசார்ந்து யுத்தங்கள் அவ்வாறுதான் முன்னோக்கி நகர்ந்தும் இருக்கின்றன.
இன்று அது ஏகாதிபத்தியத்தின் ஏதேச்சேகாரத்திற்கு எதிரானதாக அதிகம் உருவெடுத்தும் வருகின்றது.
இந்த முற்போக்கு போராட்டங்கள் அது சார்ந்த யுத்தங்களில் ஏற்பட்ட அழிவுகளை இழப்பு என்றாக பார்த்து புதிய தேசத்தை நாட்டை உலகை கட்டியமைக்கு புறப்பட வரலாறுதான் மனித குலத்தை முன்னோக்கி நகர்த்தி வந்திருக்கின்றது.
அமெரிக்காவின் வியட்நாமிற்கு எதிரான யுத்தம் இன்று வரை பேசப்படும் வெற்றிகரமான போராட்டமாக பேசப்படுவதற்கு காணரம் கருவிகள் தொழில் நுட்ப அடிப்படையில் மிகவும் பலம் வாய்த அமெரிக்காவை கருவிகள் தொழில் நுட்ப அடிப்படையில் மிகவும் குறைந்த நிலையில் உள்ள வியட்நாம் எதிர் கொண்டு வென்றதினால்தான்.
காரணம் இங்கு அமெரிக் சிப்பாய்களுக்கு எதிராக போரிட்டது ஹோ சி மின் தலமையிலான வியட்நாம் மக்கள்… மக்கள் படை மாறாக சிப்பாய்கள் அல்ல.
ஈழத்தில் போர் தோற்றதற்திற்கு காரணம் இங்கு யுத்தத்தின் இறுதி காலங்களில் அது ஒரு சிபாய் யுத்தமாக இருதரப்பும் தம்மைக் கட்டமைத்து நகர்த்தப்பட்டதே முக்கிய காரணம்.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான போர் விமானிகளில் ஒருவரான ஜான் மெக்கெய்ன் (பின்னாளில் அமெரிக்க செனட்டர்), அக்டோபர் 26, 1967 அன்று ஹனோய் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தும்போது சுட்டுவீழ்த்தப்பட்டார்.
அவர் A-4E Skyhawk ரக விமானத்தை ஓட்டிச் சென்றார். வடக்கு வியட்நாமின் SA-2 ரக ஏவுகணையால் அவரது விமானம் தாக்கப்பட்டதில், அவர் விமானத்திலிருந்து குதித்தார்.
இதில் அவரது இரு கைகளும் ஒரு காலும் உடைந்தன. ஹனோய்க்கு அருகிலுள்ள Truc Bach ஏரியில் விழுந்த அவரை வியட்நாம் மக்கள் மீட்டெடுத்து சிறைப்பிடித்தனர்.
அவர் சுமார் 5.5 ஆண்டுகள் போர்க்கைதியாக இருந்தார்.
இவரின் விடுதலையை மையப்படுத்தி அமெரிக்கா வியட்நாமுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபடவேண்டி சூழலுக்குள் தள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் வியட்நாம் மக்கள் சர்வதேச சமூகத்திடம் தமது நியாயமான போராட்டத்திற்குரிய தார்மீக ஆதரவை வீரம் செறிந்த போராட்டம் பெற்றிருந்தது.
இது அந்த போரில் அமெரிக்காவை தோற்கடித்து அமெரிக்க படைகள் வியட்நாம் போரில் இருந்து தோல்வியுடன் பின்வாங்கி போரில் வியட்நாம் வெல்வதற்கான சூழலை உருவாக்கியது.
கூடவே நேபாம் எரிகுண்டுகளால் மக்களை எரியூட்ட விசப்பட்ட நிலயில் அதனால் தீப்பற்றிய குழந்தை ஒன்று நிர்வாணமாக வீதியில் நெருப்புச் சுவாலையுடன் அலறிபடி ஓடி அந்த ஓட்டம் உலக மக்களையும் ஏன் அமெரிக்க சாமான்ய மக்களையும் வியட்நாமில் அமெரிக்காவின் கொலைவெறியாட்டத்தை அம்பலப்படுத்தி அமெரிக்க படைகளை சர்வதேச சமூகத்தின் வெறுப்பிற்குள்ளாகி அமெரிக்காவை நோக்கி ஒடுவதற்கான சூழலையும் உருவாக்கியது.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று காலை 7:53 மணிக்கு, அமெரிக்கத் தூதரகத்தின் கூரையிலிருந்து தரையிறங்காது கடைசி ஹெலிகாப்டர் (CH-46 Sea Knight) மீதமிருந்த 11 கடற்படை வீரர்களுடன் (Marines) தப்பி ஒடியது
இந்த வெளியேற்றம் முடிந்த சில மணிநேரங்களிலேயே வட வியட்நாம் படைகள் சைகானைக் கைப்பற்றின, இது வியட்நாம் போரின் முடிவைக் குறித்தது.
இதன் பின்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் போரில் அமெரிக்கா தனது போர் விமானத்தை இழந்தது.
இதன் பிற்பாடு 20 ஆண்டுகள் களித்து தற்போது ஈரானிடம் அதி நவீன போர் விமானங்களை இழந்து நிற்கின்றது.
இங்கும் ஒரு சிப்பாயை காவு கொடுத்து மற்றவர் உயிர் தப்புவதற்காக பரசூட்டில் ஈரான் மண்ணில் வீழ்ந்துள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன.
இந்த ஒருவரை கைப்பற்றுவதற்காக அமெரிக்காவும் ஈரானும் சல்லடை போட்டுத் தேடுவதான செய்தியும் வந்து கொண்டு இருக்கின்றன.
இது வியட்நாம் போரில் கைதான சிப்பாயை வைத்து உலகிடம் அமெரிக்காவிடம் பேச்சுவார்தையை நடாத்தி அமெரிக்காவை உளவியலாக பலவீனப்படுத்தும் ஆயுதமாக பாவிக்க முற்படுவதன் வெளிப்பாடுதான்.
இதனை ஈரானுக்கு எதிரான வலிந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கான ஒரு யுக்தியாக இதனை நாம் நோக்க முடியும்.
அமெரிக்காவிற்கும் இந்த இழப்பு இராணுவத் தோல்வியிற்கு அப்பால் உயிருடன் அந்த போர் விமானத்தின் விமானி பிடிபடுதல் அவமானகரமானதாகவும் அமெரிக்க மக்களால் பார்க்கப்படலாம்.
ஒன்றை மட்டும் ஆழமாக இந்த மீட்பு நடவடிக்கைகளில் நாம் அவதானிக்க வேண்டும் தமது நாட்டு இராணுவத்தின் உறுப்பினர் ஒருவரை மீட்பதில் காட்டுமம் அக்கறை தனது நாட்டு பிரஜை ஒருவரை காப்பாற்றுவதில் அமெரிக்காவோ ஏனைய வல்லதிக்க நாடுகளோ அதிகம் இந்த அளவிற்கு முயற்சிகள் காட்டுவதில்.
இந்த மீட்பு நடவடிக்கயில் எதிரி நாட்டு பிரஜைகளின் இழப்புகள் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை.
அதனால் இது வெறும் சிபாய் மீட்பான இராணுவக் செயற்பாடுதான்
அதே வேளை இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்வதினால் ஈரான் தம்மோடு ‘சம இராணுவ’ப் பலத்துடன் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தி விடும் என்பதாக ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேல் கூட்டு யுத்தம் இன்று வந்து சேர்ந்திருக்கின்றது.
ஏற்கனவே உளவியல் ரீதியாக தோல்வியை சந்தித்த அமெரிக்காவிற்கு இராணுவ ரீதியிலான தோல்வியை இது உறுதி செய்யும் நிலையிற்கு இந்தப் போர் தற்போது நகர்ந்திருப்பதாக உணரப்படுகின்றது.