ஆகவே, அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என கருதும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக தற்போது அதிகரித்து வருகிறது.
எல்லை தாண்டி அமெரிக்காவிற்குள் கனடியர்கள் செல்லும் போதெல்லாம் கனடிய நாணயத்தை அமெரிக்காவில் கொடுக்கும் போது ‘…இது என்ன …’ என்று ஏளனமாக பார்க்கும் அனுபவங்கள் சமான்ய கனடிய மக்கள் பலருக்கும் உண்டு.
கனடிய அரசியல்வாதிகளில் பலர் அமெரிக்காவில் ஒரு கால் கனடாவில் இன்னொரு கால் என்றாக தமது குளிர்கால வாசஸ்தலத்தை அதிகம் அமெரிக்காவில் கொண்டுள்ளவர்கள்.
இதற்கு முன்னைய கனடியப் பிரதமர் பிறையன் மல்லோனி ஒரு உதாரணம்
கூடவே இந்த அரசியல்வாதிகள் தமது வியாபார ஸ்தானங்களையும் அவ்வாறே அமெரிக்காவில் கொண்டுள்ளனர் பலர்
அமெரிக்க ஜனாதிபதி கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ளதைத் தொடர்ந்து, கனேடிய மக்கள் ட்ரம்ப் மீது எவ்வளவு கோபமடைந்துள்ளார்கள் என்பது சமீபத்தில் Angus Reid நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கனேடிய பொதுமக்களில் 45 சதவிகிதம் பேர், தாங்கள் கடும் கோபத்திலிருப்பதாகவும்….
37 சதவிகிதம் பேர் அமெரிக்கா தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல் தங்களுக்கு கவலையை உருவாக்கியுள்ளதாக 20 சதவிகிதம் கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆகவே, கனடா மீது கூடுதல் வரிகள் விதித்துள்ள அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும் என்னும் விடயத்துக்கு, ஜனவரி மாதம் முதல், கனேடியர்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது.
இது அண்மையில் நடைபெற்ற ஒன்றாறயோ மாகாணத் தேர்தலிலும் பிரதிபலித்தது.
இதனை மீண்டும் வெற்றி பெற்ற டக் போர்ட் அறுவடையும் செய்து கொண்டார்
சொல்லப்போனால், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதற்காக, கனேடிய மக்கள் மூன்று அம்சத் திட்டம் ஒன்றே வைத்திருக்கிறார்கள் என தற்போது உணரப்படுகின்றது
அவை:
- அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் வரும் அனைத்துப் பொருள்களுக்கும் கனடா அரசு 25 சதவிகித வரி விதிக்கவேண்டும். இதனை கனடா அரசு ஏற்கனவே ஆமுலக்கு கொண்டும் வந்தள்ளது. இந்த விடயத்துக்கு 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
- அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதி முக்கிய பொருள்களை குறிவைத்து வரிகள் விதிக்கவேண்டும். இந்த விடயத்துக்கு 70 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
- அத்தியாவசியமான சில பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய கனடா தடை விதிக்க வேண்டும். இந்த விடயத்துக்கும் 65 சதவிகித கனேடியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இங்கு எல்லா விடயங்களிலும் அதிக மக்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர் என்பது ஒரு புறம் இருக்க…
ஏற்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பு சூழல் இரு நாடுகளிலும் சமான்ய மக்களைத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது
எனவே
எல்லாம் சரி..? என்றாக கடந்து போகாமல் உண்மையில் இரு நாட்டு சமான்ய மக்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட்டாக வேண்டும்.
இதன் அடிப்படையில் அமெரிக்க சமான்ய மக்களையும் வென்றெடுத்து ஒருங்கிணைத்து இந்த புதிய வரிவிதிப்பிற்கு எதிராக போராடும் நிலமையை எற்படுத்தலே சிறந்த அணுகு முறையாக இருக்கும்.
கூடவே கனடா 40 வருடங்களுக்கு முன்பு இருந்த தங்களின் வளங்களில் அடிப்படையிலான (அதிகம்)தங்கியிராத சுயசார்பு பொருளாதாரக் கட்டுமானத்தை நோக்கி தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலமைகள் ட்றம் ஆட்சிக் காலப் பிரச்சனை மட்டும் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒற்றை உலகத் தலமை என்ற அமெரிக்க ஏகாதிபத்திய சிந்தனையின் வெளிப்பாடுதான் இது.
என்ன ட்றம் இதனை தடாலடியாக செய்ய வெளிக்கிட்டு இருக்கின்றார்.
இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் இனி ஆட்சிக்கு வரப்போகின்றவர்களும் இதனையே பின்பற்ற முயன்றனர்… முயலுவர்….
‘அமெரிக்காதான் முதன்மையானது…..’ என்று கூறியே ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் பதவி ஏற்றுச் செயற்பட்டனர்…. செயற்படுகின்றனர்… செயற்படுவர்….
என்ற அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சிந்தனையை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்