இதனைத் தொடர்ந்து வெனிசுலாவின் அதிபரையும் அவரின் குடும்பத்தையும் கடத்திச் சென்றிருக்கின்றது அமெரிக்கா.
இதனை நிச்சயம் இந்த வருடம் சமாதானத்திற்கு நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் பெண் அமெரிக்காவிடம் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றியுள்ளதாக மகிழ்வார்.
அதே வேளை ரஸ்யா அமெரிக்காவின் இந்த வெனிசுலாவின் இறையாண்மையை கேள்விக் குறியாகும் விடயம் மட்டும் அல்ல சர்வ தேச சட்டத்திற்கு முரணானது என்றாக தனது கண்டத்தை பதிவு செய்திருக்கின்றது.
இதே மாதிரியாக கருத்தை ஈரான் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கும் அப்பால் உலக நாடுகள் பலவும் இச் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.
போதை வஸ்து கடத்தலின் தலைவராக வெனிசுலா அதிபர் மதுரொ செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை அண்மைய நாட்களில் அமெரிக்க அதிபர் ட்றம் முன்வைத்து வருகின்றார்.
கூடவே இதில் கிடைக்கும் பணத்தை தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கிவருவதாகவும் குற்றச் சாடடி வருகின்றது அமெரிக்கா
ஆனால் உண்மையில் உலகின் அதி உயர் எண்ணை வளத்தை சூறையாடுவதே அமெரிக்காவின் இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம்.
இதற்கு அப்பால் அதன் கனிம வளங்களை சூறையாடுவற்கு அந்த நாட்டை தன் வசப்படுத்துவது அல்லது அதற்கு ஏற்ற தனது பொம்மை அரசை அங்கு நிறுவுவதே அமெரிக்காவின் நோக்கம்.
இடதுசாரி கொள்கையின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் வெனிசுலா மீதான தாக்குலை நடாத்துவதற்கான அரசியல் காரமும் இங்கு பிரதானமானது.
வெனிசுலா அரசு ஒரு காலத்தில் அமெரிக்க தனியார் கம்பனிகள் வசம் இருந்த தமது எண்ணை வளங்களை நாட்டின் வளங்களை தனியார் உடமையில் இருந்து அரசுடமையாக்கி மக்களுக்கு சமமாக பகிரும் பொதுவுடமையாக்கியது.
இந்த செயற்பாட்டை வெனிசுலா செய்திருப்பது அமெரிக்காவின் பாரிய வெறுப்பிற்கு வெனிசுலா உள்ளானதற்கு காரணமாகியும் இருக்கின்றது.
கடந்த சில மாதங்களாக வெனிசுலாவிற்கு அண்மையாக அமைந்த கரீபியன் கடற் பரப்பில் பல எண்ணைக் கப்பல்களை அழித்துவரும் அமெரிக்கா அதனைத் தொடர்ந்து இத்தாக்குதலை செய்திருக்கின்றது.
மிக நீண்ட காலமாக அமெரிக்கா வெனிசுலா மீது பொருளாதாரத் தடையை தனது நட்பு நாடுகளுடன் இணைந்து மேற்கோண்டு வருகின்றது.
இதனால் வெனிசுலாவில் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தி இந்த பொருளாதார நலிவை அமெரிக்கா வெனிசுலாவிற்கு எதிராக உலக நாடுகள் மத்தியில் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. இதன் மூலம் தனது தாக்குதலுக்கான நியாங்களை கற்பிக்கவும் முயலுகின்றது.
கடந்த காலங்களில் அமெரிக்கா இவ்வாறன செயற்பாடுகளை பல நாடுகள் மீது செய்தும் இருக்கின்றது அதன் ஒரு தொடர்ச்சிதான் இது.
குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் தலையீட்டின் நீண்ட வரலாறாக இவற்றைக் குறிப்பிடலாம்.

குவாத்தமாலா(1954): தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஜேக்கபோ அர்பென்ஸ் குஸ்மான் அமெரிக்க நிறுவன நலன்களைப் பாதிக்கும் நில சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, பல தசாப்தங்களாக உறுதியற்ற தன்மை மற்றும் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்த பின்னர், அவரைக் கவிழ்த்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை சிஐஏ ஆதரித்தது.
கியூபா(1959–1961): 1959 இல் பிடல் காஸ்ட்ரோ சர்வாதிகாரி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டாவை தூக்கியெறிந்த பிறகு, அமெரிக்கா அவரை நீக்க முயன்றது, இது 1961 இல் சிஐஏ ஆதரவுடன் பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பில் தோல்வியடைந்தது.
பிரேசில்(1964): அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு சக்திகளையும் அமெரிக்க ஆதரவு அரசியல்வாதிகளையும் ஆதரித்தது, ஜனாதிபதி ஜோவா கவுலார்ட்டை அகற்றி 1985 வரை நீடித்த ஒரு சர்வாதிகாரத்தை நிறுவிய இராணுவ சதித்திட்டத்திற்கு வழி வகுக்க உதவியது.
டொமினிகன் குடியரசு(1965): இடதுசாரி ஜனாதிபதி ஜுவான் போஸ் திரும்புவதைத் தடுக்க அமெரிக்க துருப்புக்கள் படையெடுத்து, “இரண்டாவது கியூபா” குறித்த அச்சங்களைக் காரணம் காட்டி, அமெரிக்காவுடன் இணைந்த அரசாங்கத்தை நிறுவ உதவியது.
ஈக்வடார்(1961–1963): அமெரிக்க ஆதரவுடன் கூடிய கம்யூனிச எதிர்ப்பு முயற்சிகள் அரசியல் கொந்தளிப்புடன் ஒத்துப்போனது, அது ஒரு இராணுவ சதித்திட்டத்துடன் முடிவடைந்தது, கியூபாவுடனான உறவுகளைத் துண்டித்து, நாட்டை வாசிங்டனுடன் மிகவும் நெருக்கமாக இணைத்தது.
போலிவியா(1964–1970): விக்டர் பாஸ் எஸ்டென்சோரோ உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்புகளை சிஐஏ ஆதரித்தது, பின்னர் அமெரிக்க நிறுவனங்களை தேசியமயமாக்கிய பின்னர் ஜனாதிபதி ஜுவான் ஜோஸ் டோரஸை குறைமதிப்பிற்கு உட்படுத்தியது.
உருகுவே(1960 கள்–1973): அமெரிக்க பாதுகாப்பு உதவி மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு இராணுவ சர்வாதிகாரத்திற்கு முன்னதாக இடதுசாரி குழுக்களை அடக்குவதை ஆதரித்தது.
சிலி(1970–1973): ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவுக்கு எதிரான எதிர்க்கட்சி முயற்சிகளுக்கு சிஐஏ நிதியளித்தது, இது 1973 இல் அகஸ்டோ பினோசேவின் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கும் 17 ஆண்டு அமெரிக்க ஆதரவுடன் சர்வாதிகாரத்திற்கும் வழிவகுத்தது.
அர்ஜென்டினா(1976): “டர்ட்டி போரின்” போது பரவலான சித்திரவதை மற்றும் காணாமல் போனதற்குப் பொறுப்பான ஆட்சியை ஆதரித்து, அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவ ஆட்சிக்குழுவை அமெரிக்கா ஆதரித்தது.
எல் சால்வடார்(1980 கள்) உள்நாட்டுப் போரின் போது அமெரிக்கா பெருமளவில் இராணுவ உதவியை அதிகரித்தது, 1981 எல் மொசோட் படுகொலை போன்ற அட்டூழியங்களுக்குப் பொறுப்பான படைகளை ஆதரித்தது.
நிகரகுவா(1980 கள்): ஈரான்-கான்ட்ரா இரகசிய நடவடிக்கை உட்பட, சாண்டினிஸ்டா அரசாங்கத்தை எதிர்த்துப் போராடும் கான்ட்ரா கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா ஆதரித்தது.
கிரெனடா(1983): உள்நாட்டு அமைதியின்மைக்குப் பிறகு, மார்க்சிய ஆட்சி மற்றும் கியூப செல்வாக்கு குறித்த கவலைகளைக் காரணம் காட்டி அமெரிக்கா படையெடுத்தது, மேலும் அரசாங்கத்தை அமெரிக்காவுடன் இணைந்த நிர்வாகத்தால் மாற்றியது.
பனாமா(1989): இராணுவ ஆட்சியாளர் மானுவல் நோரிகாவை அகற்ற அமெரிக்கப் படைகள் பனாமா மீது படையெடுத்தன, அவரது சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பனாமா கால்வாய் மண்டலத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தின.
இந்த வரலாற்று தகவல்களில் இருந்து இன்று வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல், அதிபரை கடத்தியதை நாம் எந்த வகையிற்குள் அடக்கலாம் என்ற முடிவிற்குள் வர முடியும்.
அடுத்த வீட்டுக்காரருக்கு பிரச்சனை என்று நாம் இன்று மௌனமாக கடந்து சென்றால் நாளை எம் வீட்டிற்குள் இது நடைபெறுவதற்கு வாய்ப்பை நாமே திறந்து விட்டதாக அமைந்து விடும்.
எனவே சமாதானம் ஜனநாயகம் அமைதியை விரும்பும் மக்களே அமெரிக்காவின் ஏனைய நாடுகளின் இந்த இறையாண்மையிற்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்போம்.
அமெரிக்க ஏகாதிபத்திய ஒற்றைத் துருவ அரசியலின் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளை இன்று உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. ஆனால் வரலாறு ஒரு போதும் பின்னோக்கி நகருவதும் இல்லை. அதனை நாம் சிலியில் 50 ஆண்டுகள் கடந்து கண்டோம். இங்கும் நாம் அதனை காண்போம். அதற்கு நாம் சமூகமாக இணைந்து செயற்பட்டாக வேண்டும். வாருங்கள் தோழர்களே.