இசைமுரசு நாகூர் ஹனீபா

இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் தியாக திருநாள் அன்று, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடும் இனிய வாய்ப்பு கிடைத்தது. 90 வயதை அடைந்து இருந்த அந்த முதுபெரும் கலைஞர், ஒரு குழந்தையைப் போல அன்பை பொழிந்தார்.

பகல் உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் தான் அவரை சந்தித்தோம் ஆனால் நாங்கள் உணவருந்தி வந்ததை நம்பாமல் சாப்பிட சொல்லி வற்புறுத்தினார் தன் மகனை அழைத்து அவர்களுக்கு உடனடியாக சாப்பாடு ஏற்பாடு செய் என கட்டளையிட்டார் நீங்கள் சாப்பிடாமல் இருப்பதால் எனக்கு பசிக்கிறது என்றார் கவித்துவமாக .’சரி, நாங்கள் சாப்பிடுகிறோம் என்று சொன்ன பிறகு சமாதானம் அடைந்தார்.

அவரது வாழ்க்கை வரலாற்று ஆவண தொகுப்புக்காக தமிழகத்தின் தலை சிறந்த ஓவியர்களின் கைவண்ணத்தில் ஹனிபா அவர்களின் பன்முகங்களை வரை செய்தோம் அதில் பிரபல ஓவியர் ஜமால் அவர்கள் வரைந்த ஒரு ஓவியத்தை எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தேன் அதை பார்த்தவுடன் வியர்ந்து மகிழ்ந்தார் மிகவும் திருத்தமாக ஓவியம் அமைந்துள்ளதென பாராட்டு தெரிவித்தார்.

அந்த ஓவியத்தை தன் கையில் ஏந்தி பிடித்தவாறு புகைப்படம் எடுக்கச் சொல்லி காட்சி அளித்தார். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நிறைந்த அந்தச் சந்திப்பு குறித்து சமூக வலைதளங்களில் வலைதளங்களில் பதிவிடும் போது பின்வருமாறு எழுதினேன். “இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களை சந்தித்தேன். அதே காந்தார குரல் ;அதே கம்பீரத்தோற்றம்;தொப்பி, தாடி ,கண்ணாடி என அதே அடையாளங்கள்;நறுக்குத் தெறித்தது போல் வந்து விழும் அதே சொற்கள்; அதே தூய தமிழ் உச்சரிப்பு என…. அப்படியே இருக்கிறார் நாகூர் ஹனிபா .

இன்னும் பல்லாண்டு அவர் அப்படியே இருக்க வேண்டும்”…. அப்பதிவை இட்ட மறுநொடியே முகநூல் முழுக்கப் பரவியது “இசை முரசுஅவர் எங்கே இருக்கிறார்?” எப்படி இருக்கிறார் என்பதை அறிய ஏங்கிக் கொண்டிருந்த பலரும் எமது சந்திப்பு குறித்து செய்தியையும் புகைப்படங்களையும் கண்டு குதூகலித்தனர். விருப்பக் குறிகளும், பின்னூட்டங்களும் ,பிரார்த்தனைகளுமாக எனது முகநூல் பக்கம் மூச்சுத் திணறியது.

கடந்த 5 ஆண்டுகளாக முகநூலில் இயங்கி வருகிறேன் அரசியல் சமூகம் கலை இலக்கியம் குறித்து ஆயிரமாயிரம் பதிவுகளை செய்துள்ளேன் ஆனால் இசைமுரசு குறித்த பதிவு கிடைத்த வரவேற்பு போல் ஒரு குறித்த பதிவு கிடைத்த வரவேற்பு போல் ஒரு ஒரு சிறப்பை வேறு எந்த பதிவும் பெற்றதில்லை பல்லாயிரம் பேரின் பக்கங்களில் அப்பதிவு எதிரொலித்தது.

இத்தனைக்கும் முகநூல் அறிமுகமாகி இந்த காலகட்டத்தில் அனிபா கச்சேரிகள் செய்வதை நிறுத்திவிட்டு ஓய்வில் இருந்தார் முகநூலில் புழங்கும் தலைமுறைக்கும் அவருக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது பெரும்பாலான இளைஞர்கள் அவரது குரலை அறிந்திருந்தாலும் அவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் மேலெழுந்து வந்துள்ள தவ்ஹீத் அமைப்புகள் ,இசை குறித்தும் ,கச்சேரிகள் குறித்தும்,ஹனீபா குறித்தும் இளைஞர்களிடையே எதிர்மறையான எண்ணங்களை விடைத்திருந்தன.

இத்தகைய இடர்களையும் தாண்டி ,இசைமுரசு குறித்து செய்தி முகநூலை புரட்டிப் போட்டது எனில் அவரது ஆளுமைத்திறனையும் என்று சொல்ல? தலைமுறைகளை கடந்த கலைஞன் அவர் என்பதையும் எல்லோரும் உணர்ந்த தருணம் அது .இப்போது தம் மறைவின் மூலம் ,மீண்டும் ஒரு முறை அதை உணர்த்தியிருக்கிறார் இசைமுரசு நாகூர் அனிபா. ஏப்ரல் எட்டாம் நாள் இரவு 8 :15மணிக்கு அலைபேசி வழியாக அந்த தகவல் வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.

மறுமுனையில் பேசிய குரல் நாகூர் ஹனிபா இறந்துவிட்டதாக சொன்னதும் இது பொய்யாக இருக்க கூடாதா என்று என் மனம் பிரார்த்தது. அடுத்தடுத்த அழைப்புகள் தகவலை உறுதிப்படுத்தவே கோட்டூர் கார்டன் மூன்றாவது பிரதான சாலை நோக்கி விரைந்தேன் அதற்குள் சாலை நோக்கி விரைந்தேன் அதற்குள் அந்த சாலை முழுக்க கூட்டம் கூடி இருந்தது திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்.

அவரை கடந்து அந்த வீட்டின் வளாகத்துக்குள் நுழைந்து முற்றத்தில் ஒரு கட்டிலில் இசை முரசின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. பார்த்தவுடன் மனம் கனத்தது இதயம் வலித்தது. அன்று தியாகத் திருநாளில் சந்தித்தபோது கண்ட அதே கம்பீரத்தோற்றம் தொப்பி :தாடி,கண்ணாடி என அதே அடையாளங்கள் அப்படியே இருந்தன உயிர் அற்ற நிலையிலும் கம்பீரமாகவே இருந்தார் ஹனீபா.

ஆனால் அந்த காந்தார குரல்: நெருப்பு தெரிந்தது போல் வந்து விழும் அதே சொற்கள் :அந்த தூய தமிழ் உச்சரிப்பு எதுவுமில்லை .முக்கால் நூற்றாண்டு காலம் முக்கால்நூற்றாண்டு காலம் முழங்கிய அந்த குரல் அரவமின்றி அடங்கிக் கிடந்தது பாரெங்கும் பயணித்து ஓடியாடி உழைத்து ,கலை வளர்த்த கால்கள் செயலற்று கிடந்தன. பல்லாயிரம் மேடையில் பாடும்போது அசைந்து ஆடி அந்த உடல் சலனமின்றி சாய்ந்திருந்தது.

அப்போது அங்கே ,கலைஞர் வருகிறார் என்ற தகவல் வந்ததும் பரபரப்பு தொற்றிக் கொண்டது .தி.மு.க.நிர்வாகிகள் முன் நின்று கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் கலைஞர் வந்தார். வாகனத்தை விட்டு இறங்கியதும் ஸ்டாலினை அழைத்து ஏதோ விவரம் அழைத்து ஏதோ விவரம் கேட்டார்.’நாளை நாகூரில் நல்லடக்கம் என்று சொன்னதும்,’ அங்கே சொல்லிட்டியா ?’என்று கேட்டார்.’ ஆமாம், கட்சியினர் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன் ‘என்றார் ஸ்டாலின்.

சக்கர நாற்காலி மெல்ல மெல்ல நகர்ந்து இசை முரசின் உடல் அருகே உடல் அருகே அருகே வந்தது. சுற்றிலும் நிசப்தம் .சில நிமிடங்கள் அசைவின்றி இசை முரசின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் கலைஞர் கலைஞர். 75 ஆண்டுகால நட்பு கருத்து .முரண்பாடு வராத நட்பு. கசப்பே இல்லாத நட்பு .கீறலே விழாத நட்பு. 90 வயதைத் தாண்டியும் தோள் மீது கைபோட்டு காட்சியளித்த நட்பு. லாப நட்டக் கணக்குப் பார்க்காமல் லட்சியத்துக்காக மட்டுமே நீடித்த நட்பு.

கண்ணீர் விட்டார் கலைஞர் .பேச வார்த்தைகள் வராமல் தடுமாறினார். பேசத் தொடங்கியதும் தழுதழுத்தார் ‘இசைமுரசு என்றால் அது நாகூர் ஹனிபா ஒருவர்தான் ‘என்று கலைஞர் சொன்னதை ஊடகங்கள் படம் பிடித்து உலகுக்கு அறிவித்தனர்.

அடுத்தடுத்து, கி. வீரமணி வந்தார் ,வைகோ வந்தார், திருமாவளவன் வந்தார்.தலைவர்கள், பிரமுகர்கள், ஆளுமைகள் என அந்த பின்னிரவு நேரத்தில் ஒவ்வொருவராக வந்து தமது இரங்கலை தெரிவித்தனர். இப்படி பொதுத்தலைவர்களும், பிரபலங்களும், ஊடகங்களும் வரிசைக் கட்டி வந்து புகழாரம் சூட்டும் அளவுக்கு, நாகூர் ஹனிபாவுக்கு இணையான இனியொரு ஆளுமையை இந்த தமிழ் முஸ்லிம் சமூகம் பெறவில்லையே என பலரும் வேதனைப்பட்டு கொண்டிருந்தனர் கொண்டிருந்தனர்.

மறுநாள் நாகூரில் நல்லடக்கம் என்பதால் நள்ளிரவிலேயே சென்னையிலிருந்து உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் திரள,09/04/2015 அன்று மாலை, நாகூர் தர்காவில் இசைமுரசு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்று “கன்னியரே அன்னையரே” பாடலில் அனிபா ஒலித்ததையே, இன்று கண்ணீருடன் அவருக்காக நாம் ஒழிப்போம்; அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி அகிலத்தின் வாழ்வை முடித்தாரே: அகிலத்தின் வாழ்வை முடித்தாரே; இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் இலைஹி ராஜிவூன் இன்னா இலைஹி ராஜிவூன்… இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் …..இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்………… நாகூர் அனிபா நினைவலைகள் “மூச்சடங்கிய கம்பீரம்.”…..

ஆளூர் ஷா நவாஸ்.