ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

இங்கு சூரியனிடம் சக்தி… ஆற்றல் பெறும் சந்திரன் முன்னிலையும் பெறுகின்றான்.

இந்த உண்ணா நோன்பு காலத்தில் உணவு தவிர்ப்பால் வேறு விடயங்களால் வரும் சேமிப்புகளை இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து வழங்குதல் என்றான சமத்துவத்தை நடைமுறையாக கொண்ட பண்பு நோன்பில் மகத்தானது ஆகின்றது.

இஸ்லாம் மதத்திற்குள் மார்க்கம் என்றாக சில வேறுபட்ட நம்பிக்கைகள் ஒழுங்குகள் இருந்தாலும் நோன்பு என்று வந்துவிட்டால் இந்த வேறுபாடுகள் சகலதையும் களைந்து இணைவதாக வருவது இதன் சிறப்பு.

இதற்கும் அப்பால் வேறு மதத்தவரும் தமது சகோதர்களாக முஸ்லீம் சகோதர்களை அணைத்து அவர்களின் நோன்பு துறப்பு வேளைகளில் வேலைப் பரிமாற்றம் உழைப்புப் பரிமாற்றம் உணவுப் பரிமாற்றம் என்றான இணைப்புக்கள் மனித நேயத்தின் இணைப்பின் அழகான பக்கங்கள் ஆகும்.

எமது இலங்கை நாட்டில் பாற் சோறு, பொங்கல், நோன்புக் கஞ்சி என்றாக தம்மை வேறுபடுத்தி அடையாளப்படுத்தினாலும் பலகாரங்களையும் பதார்த்தங்களை பண்டிகைகளின் போது பரிமாறி அன்பை பரிமாறும் கொண்டாட்ட மனப்பாங்கு அழகானது இனிமையானது சகோதரத்துவமானது.

பகல் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து உணவுத் தொகுதிகள் வறண்ட நிலையில் ஊட்டச் சத்து உள்ள நீர் ஆகாரமாக இருக்கும் நோன்புக் கஞ்சி யுடன் நோன்பு துறத்தலும் அதன் பின்பு தொழுகையும் அந்த தொழுகையில் இருக்கும் உடற்பயிற்சி முறையும் தியானங்களும் மருத்துவ உலகிற்கு(Medical Science) பாடம் எடுப்பவை.

ஜேருசலத்தில் ஆணி வேரைக் கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம் என்றாக சிறு சிறு வேறுபாடுகளை கொண்டு மதங்களாக அது மனப் பிறழ்வாகி மனப் பிரிவுகளை சிலரிடையே ஏற்படுத்தினாலும் ஒரு குடும்ப வழி வந்த மரபணு(DNA)ப் பிணைப்புகளை நாம் மறுக்கலாகாது.

அதுதான் பாலஸ்தீனத்தில் நாடற்றவர்களாக வந்த யூத மக்களுககான இடம் கொடுப்பாகவும் லெபனான போன்ற இடங்களில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய மக்களும் இணைந்து வாழும் முன் உதாரணங்கள்.

இதற்கு உறுதி சேர்க்கு வகையில்தான் உலகம் முழுவதும் மக்கள் இணைந்து வாழுகின்றனர்.

ஆளும் வர்க்கம் மக்களைப் பிரிக்க முற்பட்டாலும் இதற்கு மதப் பிளவுகளை போர்களை பாவித்தாலும் மனங்களால் மனிதர்களா இணைந்தால் போர் ஏது…? அழிவு ஏது…?

தர்மத்திற்கு புறம்பான போரை அல்லா எற்கமாட்டார் அந்த பெருமகனார் நிச்சயம் தண்டிப்பார் என்பதற்கு எம் கண்முன்னே விரிந்து செல்லும் தற்போதையை ஈரானுக்கு எதிரான யுத்தம் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அங்கு வாழும் மக்களாலேயே பாடம் எடுக்கப்படுவதாக உணர முடிகின்றது.

அதனால்தான் பறக்கும் குண்டுகள் பெற்றுக் கொடுக்காத வெற்றியை மனங்கள் மனிதர்கள் மனித நேயம் பெற்றுக் கொடுக்கும் என்றாக போர் தொடுத்தவர்களின் இந்த தோல்வியும் தர்மத்தின் பக்கத்தில் நின்றவர்களின் வெற்றி காட்டி நிற்கின்றன.

இந்த வேளையில் ஈகையாக எமது மனங்கள் சந்தோசங்களை பாதிக்கப்பட்ட சகல தரப்பு மக்களுக்கும் வழங்க நிற்போம். அவர்களுக்கான ஆற்றுப்படுத்தலை ஈகையாக்குவோம்அனைத்து இஸ்லாமிய சகோதர்களுக்கும் எனது ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.

(எனது புரிதலின் அடிப்படையில் மதங்களை பற்றி விடயங்களையும் மார்க்கத்தைப் பற்றியும் கூறியுள்ளேன். ஏதாவது தவறுதலான புரிதலாக என்பதில் பதியப்பட்டிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் செழுமைப்படுத்துகின்றேன். யார் மனதையும் நோகடிக்கும் எண்ணம் இந்த இயக்கவியல் பொருள் முதல்வாதி சகாவிற்கு இல்லை)