உணவு விழிப்புணர்வு: மைதாவும் நாமும்

ஆம் இந்த மைதா மாவு எதில் இருந்து வருகிறது?? என்று கேட்டால்

பலரிடமும் வரும் பதில்

மரவள்ளி கிழங்கில்(tapioca) இருந்து வருகிறது அல்லது

மக்காச் சோளத்தில்(maize) இருந்து வருகிறது என்பது தான்.

ஆனால் உண்மை யாதெனில்

கோதுமை மாவிற்கு பாலிஷ் செய்து ஃபேர் & லவ்லி போட்டு, பட்டி டிங்கிரிங் செய்தால் கிடைப்பது தான்

“மைதா மாவு “

மேலைநாடுகளில் இதை “cake flour” என்றும்

இந்தியாவில் ” மைதா” என்றும் அழைக்கப்படுகிறது.

மைதா எனும் சொல் அரபி மொழியில் இருந்து வந்தது.

அரபு மொழியில் “மைதா” என்றால் உணவு மேஜை(food table) என்று பொருள்.

இந்த மைதா மாவு எப்படி உருவாக்கப்படுகிறது??

கோதுமையின் விதையை (endosperm) தனியாக பிரித்தெடுத்து அதை நுண்ணிய சல்லடை(seive) கொண்டு சலித்தெடுத்து

பாலிஷ் செய்யும் பல ரசாயனங்கள் கொண்டு பட்டை தீட்டி கிடைக்கும் பொருளே மைதா மாவு.

இப்படிச் செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன?

மைதா மாவில் 100 கிராமில் 77 கிராம் மாவுச்சத்து.

பட்டை தீட்டுவதால் க்ளைசீமிக் இன்டெக்ஸ் இதற்கு மிக அதிகம்(GI-71) . ஆகவே இதை சாப்பிட்டவுடன் இன்சுலின் ஜிவ்வென்று ஏறும்.

இத்தோடு முடிந்தால் கூட பரவாயில்லை.

இன்னும் இருக்கிறது.

பாலிஷ் செய்ய எதை உபயோகிக்கிறார்கள் தெரியுமா?

கோதுமையை பாலிஷ் செய்ய நான்கு வகையான ரசாயனங்கள் உபயோகிக்கப்படுகின்றன.

அவற்றில் முக்கியமான இரண்டு

அலோஷான்( alloxan) மற்றும் பென்சைல் பெராக்சைடு ( benzoyl peroxide)

முதலில் alloxan கதைக்கு வருவோம்.

இந்த அலோக்சான் பல மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட உணவுகள் பட்டியலில் இருக்கிறது.

இது நமது கணையத்தில்(pancreas) இருக்கும் பீட்டா செல்களை அழிக்கவல்லது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

கணையம்— பீட்டா செல்களா? அப்படினா??

நமது ரத்த சர்க்கரை அளவுகளை சரியாக வைத்திருக்க இலை போன்ற நமது கணையத்தின் நுனிப்பகுதியில் இருந்து இன்சுலின் எனும் ஹார்மோனை பீட்டா செல்கள் சுரக்கின்றன(beta cells of islet of langerhans)

இந்த “இன்சுலின்” நாம் உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன் ஆகும்.

இந்த பீட்டா செல்கள் அழிந்துவிட்டால் ஒருவர் நிரந்த நீரிழிவு நோயாளி ஆகிவிடுவார்.

ஆகவே மைதா மாவும் ஒரு வகையில் பயோ-டெரரிசம்(bio terrorism) தான் என்பேன்.

ஆம். ஒரு நாட்டையே நீரிழிவு நோயாளிகள் ஆக்கிவிட்டால்.. அந்த நாட்டை ஊனமாக்கியதைப்போல் தானே.

உதாரணம்:

( ஒரு படத்தில் சந்தானம் காமெடியில் தனது அடியாளுக்கு கை கால் படபடப்பு வந்ததும் சுகர் மாத்திரை போட்டியா என்று கேட்பார்.

இன்னொரு படத்தில் விஜய் சேதுபதியை விசாரிக்க வரும் ரவுடி பசுபதி சுகர் நோயாளியாக நடித்திருப்பார். நாட்டின் அன்றாட நிலையை பிரதிபலிப்பவையே சினிமாக்கள். கூடிய விரைவில் ஹீரோவுக்கும் சர்க்கரை இருப்பது போல படம் வந்தாலும் வரும். இதுவே இன்றைய நம் நாட்டின் நிலைமை)

எலிகளுக்கு இந்த அலோக்சானைக் கொடுத்து பரிசோதனை செய்ததில் நிச்சயமாக இவை நீரிழிவு நோயை பரிசாகத் தரவல்லது என்கிறது ஆய்வு.

மேலும் இந்த alloxan பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக்குறைபாட்டை (congenital birth defects) தரக்கூடிய teratogen பட்டியலில் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?? குழந்தை வயிற்றில் இருக்கும் போது எத்தனை தாய்மார்கள் பரோட்டா, பப்ஸ், பீட்சா, பர்கர் என்று வாங்கி சாப்பிடுகிறீர்கள்? அதில் என்ன இருக்கிறது என்று ஒருமுறை யோசித்ததுண்டா??

மேலும் , இந்த மைதாவை பாலிஷ் செய்ய அளவின்றி பென்சைல் பெராக்சைடு (BPO) உபயோகிக்கப்படுகிறது.

இந்த BPO ஒரு புற்று நோய் காரணி ( carcinogenic) என்று கண்டறியப்பட்டுள்ளது. தோல் புற்றை உருவாக்கவல்லது.

புரோட்டா கடைகள், பேக்கரிகள், அதிகமானதற்க்கும்

சர்க்கரை நோயாளிகளும், இதய நோயாளிகள் அதிகமாவதற்க்கும் நேரடி தொடர்பு உண்டு .

அதை நம் அண்டை மாநிலமான கேரளாவிலேயே காணலாம்.

கேரளாவில் சராசரியாக 10,000 பேரில் 382 ஆண்கள் பேர் இதய நோய்களுக்கு மரணிக்கின்றனர். 10,000 பேரில் 110 பெண்கள் இதயப்பிரச்சனையில் இறக்கின்றனர் . இது வளர்ந்த நாடுகளான ஜப்பானின் இறப்பு விகிதாச்சாரத்தை விட 4-6 மடங்கு அதிகம்.

ஏன் இத்தனை மரணங்கள்?

கேரளாவில் கடந்த இருபது வருடங்களில் தேவையற்ற பேக்கரி பண்டங்களான பப்ஸ், கேக், பர்கர், பீட்ஸா, பரோட்டா போன்ற மைதாவினால் செய்த உணவுகளை அதிகம் உண்பது தான் காரணம் என்கிறது ஆய்வு.

அதனாலேயே அந்த மாநில அரசு இந்த ஜங்க் உணவுங்களுக்கு 14.5% வரிவிதித்து மக்களை அப்படியாவது இந்த மைதா பொருட்களை உண்பதை தடுக்கலாம் என்று பார்க்கிறது.

நமதுநாட்டில் மைதா பொருட்களை அதிகமாக உண்ணும் நமக்கும் இது அபாய மணி தான்.

தெருக்குத் தெரு பரோட்டா கடைகள் இருக்கிறது.

வீச்சு, கொத்து என்று விதவிதமாக மக்கள் எண்ணையில் நீராடிய புரோட்டாவையும்,கேக்,பப்ஸ், பர்கர், பீட்சா என வஞ்சனையில்லாமல் ருசித்து உண்கிறோம்.

அதனால் நமக்கும் இதய நோய், நீரிழிவு நோய் அனைத்தும் தடையின்றி வருகிறது

ஆகவே, இந்த மைதாவினால் ஆன பொருட்களை உண்ணும் முன் ஒரு முறை யோசித்தால் அதுவே இந்த கட்டுரையின் வெற்றி.

இந்த பூமியில் உயிர்கள் தோன்றிய வரலாற்றில்

தன் இனத்திற்கு தானே குழி தோண்டி மண்ணையும் அள்ளிப் போட்டுக் கொள்ளும் ஒரே

இனம்

மனித இனம் தான்