சர்வதேச மகளிர் தினம்

இதில் மேற்குலகம், கிழக்குலகம், மூன்றாம் உலகம் என்றாக அதிக வேறுபாடுகளை காண முடியவில்லை.

சனத் தொகையிலும், உழைப்பிலும், திறமையிலும், சிகரத்தை தொடும் அளவிற்கான வெளிப்பாடுகளை காட்டி நிற்கும் நிலையிலும்…. ‘…என்னை நல்லா கவனிச்சுடுவார்….’ ‘…. நான் நல்லா பார்த்துக்குவேன் என்றாக பெண்ணை அணுகும் மன நிலையை நாம் எனது கீழைத் தேச பேச்சு வழக்கில் திருமணம். வாழ்க்கை. இணையர்கள். என்றாக ஏன் காதல் என்றான பேச்சுகளில் இது தொடரத்தான் செய்கின்றது.இதில் தொக்கு நிற்கும் தங்கியிருத்தல் என்ற மேலாதிகம் புரியப்பட வேண்டும்.

இத்தனைக்கும் பெண்களே அதிகம் குடும்பத்தையும் தனது வாழ்க்கைத் துணையையும் கணவரையும் காதலரையும் அரவணைப்பாக அன்பாக கடமையாக பார்க்கும் அதிக நிலையே எம் சமூகத்தில் நிலவுகின்றது.

இந் நிலையில் ‘…. நல்லா பார்த்துக்குவாரு….’ ‘…நல்லா கவனிப்பேன்….’ என்றாக பெண்களுக்கான பாதுகாப்பு என்றான ஆண்களின் சமூகத்தின் காப்புப் போடுதலே இங்கு பெண்ணாணவள் சம உரிமையுடன் வாழும் சமூக அந்தஸ்தை இதுவரை பெறவில்லை அதற்காக போராடிக் கொண்ட இருக்கின்றாள் என்பதை வெளிப்படுத்தும் நிலமையில் இன்னமும் இருக்கின்றாள் என்பதை உணர வைக்கின்றது.

இயல்பின் பெண்களிடம் இருக்கும் பௌதிக ஏற்ற இறக்கங்களும் மினு மினுப்புகளும் அவளை அழகாக காட்டுவது இயல்பானது. அவள் குழந்தையைச் சுமப்பவளாக இருக்கும் உயிரியல் நிலமையிற்கு இது தேவையானதும் இயற்கையானதும் கூட.

அந்த வகையில் இறக்கி வைக்க முடியாத சுமையாக குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் தாயாகவும் அவளே உயர்ந்து நிற்கின்றாள்.ஆனால் இவ்றையெல்லாம் வைத்து அவர் ஒரு உணர்வுள்ள உயிர்புள்ள சக மனுசியாக பார்க்க வேண்டிய சமூகம் சில இடங்களில் அவரின் உணர்வுகளை மதிக்காது ஏற்காது அவளைப் போகப் பொருளாக மட்டும் பார்பதுவும் அணுகுவதும் அதன் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்குவதும்… கட்டுப்பாடுகள் போடுவதும்… இங்கு கலாச்சாரம் ஆக்கப்படுகின்றது.

ஆடை என்பது அவரது சுதந்திரம் என்றாக இருக்கும் போது அதில் ‘….அப்படி ஏன் உடை அணிந்தாய்….’ ‘…அதனால்தான் இந்த தவறு பிரச்சனை ஏற்பட்டது….’ என்றான ஆண்களின் வன் கொடுமையிற்கான செயற்பாட்டிற்கு ஆண் குற்றவாளியை தப்ப வைக்கும் வகையிலான பேச்சுகளே பெண்ணை அதிகம் பாதிப்படையச் செய்வதாக… அதுவும் உளவியல் ரீதியாக அவளை குற்றவாளியாக்கும் சமூக அணுகு முறையை நாம் சம்மட்டியால் அடித்து உடைத்தாக வேண்டும்.

பெண்கள் தமக்கான சுதந்திரத்தை அது கல்வியில் தொழிலில் உடையில் வாழ்கையில் ஏன் பிள்ளைகளை பெற்றுக் கொள்ளுவதில் என்றாக அவளை நாம் உணர்வுகள் உயிர்பான மனுசியாக முடிவெடுப்பதற்கு நாம் அங்கீகரித்து மதிப்பும் மரியாதையும் வழங்கும் சூழலை உருவாக்க வேண்டும்.

அது அவளைத் தாயாக தங்கையாக அக்காவாக இணையாளாக ஏன் நல்ல நண்பியாக சக மனுசியாக பதட்டம் இன்றி அவள் இந்த பூவுலகில் வாழும் வாழ்க்கையை இன்னும் செழுமையாக்க வேண்டிய ஒரு நாளாக இந்த வருட மகளிர் தினததை நாம் முன்னோக்கி நர்த்துவோம்.

அந்த வகையில் இவ்வருட மகளிர் தினம்….2026 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான அதிகாரப்பூர்வ பிரச்சார கருப்பொருள் GiveToGain ஆகும்.இது பாலின சமத்துவத்தை விரைவுபடுத்த தாராள மனப்பான்மை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவு ஆகியவற்றின் மனநிலையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

கூடவே ஐ.நா. “உரிமைகள். நீதி. நடவடிக்கை. அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கும்” என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது, இது சட்ட, சமூக மற்றும் பாதுகாப்புத் தேவைகளை எடுத்துக்காட்டுகிறது.

வாழும் சூழலில் நிலவும் தட்ப வெப்ப நிலைகளின் அடிப்படையில்தான் மனிதனின் உடைகளின் வடிவம் உருப்பெற்றது. இது மனித நாகரீகத்தின் வளர்ச்சிதான்.இது பிறப்பாடு அவ்வப்பகுதி மக்களின் கலாச்சாரம் ஆகவும் மாறிக் கொண்டன.

பெண்கள் கால சூழல் இடமாற்றத்திற்கு ஏற்ப தாம் மேற்கொள்ளும் தொழில் விளையாட்டு போன்றவற்றிற்கு ஏற்ப வசதியான உடைகளுக்குள் தம்மை மாற்றுகின்றனர்.

இது ஆண்களுக்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த உடை மாற்றங்கள் பெண்கள் இடத்தில் ஏற்படும் போது கலாச்சாரம் பண்பாடு என்றாக பெண்கள் அதனை மீறியதாக குற்றவாளிக் கூட்டில் நிறுத்தும் ஆண் ஆதிக சமூகப் பார்வையே இங்கு பிரச்சனை ஆகின்றது.

கலாச்சார உடைகளில் இருக்கும் அழகு பெண் ஒருவளின் வேலைகளுக்கு ஏற்ப மாற்றம் அடைதல் என்பதாகும் போது அது கலாச்சாரம் பண்பாடு என்பதற்கு எதிரானதோ அல்லது பிழையானதோ அல்ல.

அது அவளின் சௌகரியத்திறகான மாற்றமாக பார்க்கும் உணரவே இந்த சமூகத்திற்கு தேவையாகின்றது இதில்தான் பிற்போக்கு சமூகம் பெண்களை குறி வைத்து அவர்கள் மீது ஒடுக்கு முறையை இந்த சமூகம் செய்ய முனைகின்றது.

இது பெண்களின் சுதந்திரத்திற்கு உரிமையிற்கு கலாச்சாரம் பண்பாடு என்று சொல்லி அவளை முடக்கவும் முயலுகின்றது.இவற்றையெல்லாம் முறியடித்துதான் எமது நாட்டின் பிரதமர் மக்களிடம் சென்று சேவையாற்றவும் வேண்டியுள்து பெண் அமைச்சர்கள் செயலாற்ற வேண்டியுள்ளது.

ஏன் பெண்கள் மீதான வன்மத்திற்கும் பேரினவாத்திற்கும் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதியாக உறுதியாக குரல் கொடுக்கவும் வேண்டியுள்ளது.

இதில் மகளிருக்கான உலகக் கோப்பையில் சாதித்து சம்பியன் ஆகவும் வேண்டியுள்ளதை இந்திய மகளிர் அணியும் செய்து காட்டியுள்ளது.

நம்மால் முடியும் பெண்ணே நம்மால் முடியும்.

{மேலதிக தகவல்கள்…….

உலகெங்கிலும் மகிழ்ச்சியின் அளவுகோல் பொருளாதார செழிப்பு மட்டுமல்ல, சமூகப் பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்தையும் சார்ந்துள்ளது.

எந்த நாட்டின் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தவரை, கடந்த பல ஆண்டுகளாக பின்லாந்தின் பெயர் முதலிடத்தில் உள்ளது. உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது முறையாக உலகின் மகிழ்ச்சியான நாடாக மாறியுள்ளது, மேலும் அதன் பெண்களின் மகிழ்ச்சி இதற்கு ஒரு பெரிய காரணமாகும்.

பின்லாந்தில் வேலை நேரம் மிகவும் கண்டிப்பானது. இங்குள்ள பெண்கள் தொழிலையும் குடும்பத்தையும் தனித்தனியாக பார்ப்பதில்லை. அலுவலகத்தை சரியான நேரத்தில் விட்டுவிட்டு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது அங்குள்ள கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இதன் காரணமாக, ‘சோர்வு’ போன்ற மனநலப் பிரச்சினைகள் மிகவும் அரிதானதே.

பின்லாந்தின் பெற்றோர் விடுப்பு, உலகிலேயே சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு, தாய்மார்களுக்கு நீண்ட விடுப்பு கிடைப்பது மட்டுமல்லாமல், தந்தையும் குழந்தைகளைப் பராமரிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது பெண்கள் மீது வீடு மற்றும் குழந்தைகளின் பொறுப்பை சுமத்துவதில்லை.

உயர்தரக் கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு இங்கு கிட்டத்தட்ட இலவசம் அல்லது மிகவும் குறைந்த செலவில் கிடைக்கிறது. உடல்நலக் கவலைகளால் ஏற்படும் மன அழுத்தம் குறைவதும், குழந்தைகளின் கல்விச் செலவு குறைவதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது.

பின்லாந்து பெண்களுக்கு உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பெண்கள் இரவில் எந்த பயமும் இல்லாமல் வெளியே செல்லலாம். இந்தப் பாதுகாப்பு அவர்களுக்கு மன அமைதியையும், அவர்கள் விரும்பும் வாழ்க்கையை வாழ சுதந்திரத்தையும் அளிக்கிறது.

பின்லாந்தைத் தவிர, டென்மார்க், நோர்வே மற்றும் ஸ்வீடன் போன்ற நோர்டிக் நாடுகளிலும் பெண்கள் மகிழ்ச்சிக்கான பட்டியலில் முன்னணியில் உள்ளனர்.

இந்த நாடுகள் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற சட்டத்தை கண்டிப்பாக அமுல்படுத்துகின்றன. இது பெண்களில் நம்பிக்கையையும் திருப்தியையும் ஏற்படுத்துகிறது.

மகிழ்ச்சி என்பது சிரிப்பை மட்டுமல்ல, பெண்கள் தங்கள் அடையாளத்திற்காக போராட வேண்டிய அவசியமில்லை. பின்லாந்து பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், ஏனெனில், சமூகம் அவர்களை ‘இரண்டாம் தர’ குடிமக்களாக அல்ல, சமமான மற்றும் சுதந்திரமான நபர்களாகப் பார்க்கிறது.

இலங்கை, இந்தியாவை பொறுத்தவரை, இது சற்று வித்தியாசமானது.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு மற்றும் சமூக மனநிலையைப் பொறுத்தவரை இன்னும் அவர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

நன்றி: சனல் 18 தகவல்கள்}