திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது

திருகோணமலையில் பல காலங்களுக்கு முன்னராக ஒரு பழைய பாடசாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது இயங்கி வருகிறது. இந்த நிலைமை இப்போது மூடப்படும் பாடசாலைகளுக்கு ஏற்படும் வாய்ப்பு உள்ளது!

வேறு எந்த பாடசாலைகள் அழிவின் விழிம்பில்?

  1. நாமகள் தமிழ் மகா வித்தியாலயம் – ஒரு காலத்தில் 400 மாணவர்கள் வரை கல்வி பயின்ற ஒரு பாடசாலை இன்று 30 மாணவர்கள் ஆக குறைந்து தனது இறுதி நேரத்தில் இருக்கிறது.
  2. புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் – இந்த பாடசாலையில் 1000ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கக் கூடிய அனைத்து வசதிகளும் உண்டு. ஒரு குறிப்பிட்ட காலம் வரை அந்த அளவு எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி கற்ற இந்தப் பாடசாலையில் தற்போது 126 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர், இந்த எண்ணிக்கை கனிசமான அளவில் குறைந்து செல்கின்றது. இப்போதே இந்த பாடசாலையை வேறொரு தரப்பு கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆகவே இந்தப் பாடசாலையும் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறது.
  3. விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் – இந்தப் பாடசாலையில் 1000 ற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்ற வரலாறு உள்ளது, இப்போதும் அதற்கான வசதிகள் உள்ளது, ஆனால் கல்வி பயில்வது வெறுமனே 230 மாணவர்கள் மாத்திரமே. இங்கும் இந்த மொத்த எண்ணிக்கையில் தொடர்ச்சியான வீழ்ச்சி இருக்கின்றது. ஆகவே இந்தப் பாடசாலையும் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறது.

காரணம் என்ன?

  1. கிராமப்புரத்து பாடசாலைகளில் இருந்து நகரப்புற பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கிறது. காரணம் அந்தப் பாடசாலைகளில் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதும் பெறுபேறுகளின் வளர்ச்சியும்.
  2. தமிழ் மக்களின் கனிசமான அளவு வெளியேற்றம், புலம்பெயர்வு.
  3. மாணவர்களை அனுமதியில் பாடசாலைகளில் கட்டுப்பாடின்மை.
  4. ஆங்கில மொழி பாடசாலைகள் மீதான மோகம்

இவற்றில் முக்கியமான பாடசாலைகளின் விஸ்தரிப்பு! இவர்கள் ஏன் பாடசாலையை விஸ்தரிக்க வேண்டும்? ! ஒவ்வொரு பாடசாலையிலும் ஒரு தரத்துக்குரிய பிரிவில் ஆகக் கூடியது 90 மாணவர்களை இனத்தாலே போதுமே மாற்றயவர்கள் இவ்வாறான பாடசாலைகளில் சேரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. இருப்பவர்களுக்கு இடவசதி இல்லை என்பது வேறு, மேலதிகமாக சேர்த்துக்கொள்ள இடவசதி வேண்டும் என்பது வேறு.

இன்னுமொரு பாடசாலை தனது சமூக மக்களின் உதவியோடு பாடசாலையில் பின்புறமாக உள்ள மக்கள் காணிகளை கனிசமான அளவு பணம் செலுத்தி வாங்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம், சம்மந்தப்பட்ட பாடசாலைகள் மற்றும் சமூகத்தினர் இது தொடர்பில் இப்போதே சிந்தித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், இல்லையெனில் இன்னும் 5 வருடங்களில் இந்த பாடசாலைகள் இருக்காது அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கும்.

(Rejinold sutharsan Adhavave அவர்களின் பதிவிலிருந்து)