அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் முழு ஊரடங்கு?

ஜேர்மனியில்,கடந்த சில நாட்களாக, கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது. குறிப்பாக கடந்த ஏழு நாட்களில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக்  காணப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்த அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நாட்டில் உள்ள அனைவருக்கும் விரைவில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்படுமென  என அந்நாட்டின்  சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு  முழுவதும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.