ஆப்கானிலிருந்து வெளியேறியது அமெரிக்கப் படை

மக்களை ஏற்றிச்செல்ல இம் மாதம் 31ஆம் திகதி  வரை அவர்களுக்குக் கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் காபூல் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் கடைசி இராணுவ விமானம்  இன்று  கிளம்பியதாக, அந்நாட்டின் மத்திய கட்டளைத் தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்தார்.

அத்துடன் வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள் மற்றும் நவீன ஏவுகணைத் தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைச் செயலற்றதாக்கி விட்டதாகவும் இதனால் தாலிபன்களால் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தங்கள் இராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது முடிவுக்கு வந்துள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தெரிவித்ததோடு தம் நாட்டு இராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார்.

மேலும் தலிபான்கள் பாதுகாப்பான பாதையில் உறுதிமொழிகளைச் செய்துள்ளனர். உலகநாடுகள் அவர்களை தங்கள் கடமைகளுக்குக் கட்டுப்படுத்தும்.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்புவோருக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க தலிபான்களுடன் ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம் எனவும்  தெரிவித்துள்ளார்.

ஆப்கானிலிருந்து அமெரிக்‍க இராணுவம் முழுமையாக வெளியேறியதால், ஆப்ப்கானிஸ்தான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கூறி, அங்குள்ள தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.