இந்தியா – அமெரிக்கா மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம்

வெள்ளை மாளிகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டொனால்ட்  ட்ரம்ப், நாங்கள் சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய ஒப்பந்தம் ஏற்பட உள்ளது.

சீனா உடனான ஒப்பந்தத்தையும் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். உண்மையில் ஒருபோதும் நடக்க முடியாத விஷயங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது.

நேற்றுதான் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களிடம் அனைவரும் உள்ளனர். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தங்கள் செய்யப் போவதில்லை. சிலருக்கு நன்றி தெரிவித்து கடிதம் மட்டும் அனுப்ப உள்ளோம். அவர்கள் 25 வீதம், 35 வீதம், 45 வீதம் வரி செலுத்தப் போகிறார்கள். எங்களுக்கு எளிதான வழி அதுதான். எங்கள் அதிகாரிகள் அப்படிச் செய்ய விரும்பவில்லை. அவர்கள் சில நாடுகளுக்கு மட்டும் அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள். அதிகமான ஒப்பந்தங்களைச் செய்யவே அவர்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.