18 வயதான இந்த இளம் வீரர், 200 மீட்டர் தூரத்தை வெறும் 19.67 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், உசைன் போல்ட் தனது 20 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் பிரிவில் 19.90 வினாடிகள் என்ற சாதனையைப் படைத்திருந்தார். தற்போது கௌட் கௌட் அதனை விஞ்சி முதலிடம் பிடித்துள்ளார்.
“இந்த தருணத்திற்காகவே நான் காத்திருந்தேன். இந்தப் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கு முன்னதாக எனது குறிப்புகளை மீண்டும் சரிபார்த்தேன். நான் 19.75 வினாடிகளில் ஓடி முடிப்பேன் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன், ஆனால் எதிர்பாராதவிதமாக 19.67 வினாடிகளிலேயே இலக்கை அடைந்துவிட்டேன்.”
உலகின் மிகச்சிறந்த வீரரான உசைன் போல்ட்டுடன் தன்னை ஒப்பிடுவதைப் பற்றி கேட்டபோது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:
“மக்கள் என்னை உலகின் சிறந்த வீரருடன் ஒப்பிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இறுதியில் நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். நான் எனது பாதையில் பயணிக்கிறேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. நான் தடகள மைதானத்திற்குள் இறங்கிவிட்டால், அங்கே நானும், ஓடுதளமும், எனது காலணிகளும் (Spikes) மட்டும்தான் இருப்போம்.”