உச்சம் தொடும் மசகு எண்ணெய் விலை?

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (The Wall Street Journal) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து உலக சந்தையில் எண்ணெய் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 119 அமெரிக்க டொலர்களை அண்மித்த போதிலும், பின்னர் சற்று வீழ்ச்சியடைந்திருந்தது.

இது குறித்து ரியாத்திலுள்ள கிங் பைசல் ஆய்வு மையத்தின் நிபுணர் உமர் கரீம் கருத்துத் தெரிவிக்கையில்,

போரின் போக்கைப் பொறுத்து மசகு எண்ணெய் விலை 150 அமெரிக்க டொலர்களைத் தாண்டுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“செங்கடல் முனையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ அல்லது அங்கு ஏதேனும் தடைகள் ஏற்பட்டாலோ, எண்ணெய் விலை 150 டொலர்களுக்கும் மேல் அதிகரிப்பது நிச்சயம்.

தற்போதைய சூழலில் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான ஒரேயொரு முக்கிய போக்குவரத்து பாதையாக இதுவே காணப்படுகிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.