ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

இது தொடர்​பாக ஏர் இந்​தியா விமான நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது:

உள்​நாடு மற்​றும் சர்​வ​தேச விமானங்​களின் பயணி​கள் கட்​ட​ணம் 3 கட்​ட​மாக அதி​கரிக்​கப்​படு​கிறது.

அதன்​படி, முதல் கட்​ட​மாக இன்று அதி​காலை முதல் உள்​நாடு மற்​றும் சார்க் நாடு​களான இலங்​கை, பங்களாதேஷ், பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், நேபாளம், பூடான் செல்​லும் சர்​வ​தேச விமானங்​களுக்கு 399 இந்திய ரூபா கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது.

மேற்கு ஆசி​யா, மத்​திய கிழக்கு நாடு​களுக்கு 10 அமெரிக்க டொலர், தென்​கிழக்கு ஆசிய நாடு​களுக்கு 20 டொலர், ஆபிரிக்க நாடு​களுக்​கு, 30 டொலர் கட்​ட​ணம் உயர்த்​தப்​படு​கிறது.

இந்​தி​யா​வில் இருந்து சிங்​கப்​பூருக்கு இயக்​கப்​படும் விமானங்​களுக்கு எரிபொருள் கட்​ட​ணம் வசூலிக்​கப்​ப​டா​மல் இருந்​தது. இனிமேல் அந்த கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும்.

2 ஆம் கட்ட கட்டண உயர்வு 18  திகதி அதி​காலை முதல் அமுலாகும். ஐரோப்​பிய நாடு​களுக்கு 25 டொலர், வட அமெரிக்கா​வுக்​கு, 50 டொலர், அவுஸ்​திரேலி​யா​வுக்கு 50 டொலர் கட்டண உயர்வு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

3 ஆம் கட்​ட​மாக, ஜப்​பான், ஹாங்​கொங், தென்​கொரியா செல்லும் ஏர் இந்​தியா விமானங்​களுக்​கான கட்டண உயர்வு குறித்து பின்​னர் அறிவிக்​கப்​படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.