கடைசி உண்ணாவிரதப் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் கடந்த ஒரு மாதமாகப் போராடி வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள், ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே 6ஆவது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, கடந்த 14ஆம் திகதி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்குக் கடிதம் எழுதினார்.

அதில், “விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.