காசா அமைதி திட்டம்: இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல்:டிரம்ப் அறிவிப்பு

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரண்டு வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.