கேரட்டை 3,500 ரூபாய்க்கு விற்றவருக்கு எதிராக வழக்கு

 மோசமான வானிலையைப் பயன்படுத்தி, அதிக விலைக்கு காய்கறிகள் மற்றும் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, காலி கட்டுகொட பகுதியில் உள்ள காய்கறி கடைகளை ஆய்வு செய்தபோது, ​​வியாபாரி ஒருவர் ஒரு கிலோ கேரட்டை 3,500ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருந்ததாகவும், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.