சிறைக்கைதிகளின் நெற்செய்கை, காட்டு யானைகளால் அழிவு

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு பின்னால் உள்ள திருப்பெருந்துறை திறந்தவெளி சிறைச்சாலை காணியில் இந்த நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், நள்ளிரவு வேளையில் வயல் நிலத்திற்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பயிர்களை மிதித்தும் உண்டும் அழித்துள்ளது. குறித்த யானையை விரட்டுவதற்காக பொறுப்பதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யானை வெடிகளைக் கொளுத்தியும், டயர்களை எரித்தும் தீவிர முயற்சி எடுத்தனர். எனினும், அந்த யானை மீண்டும் மீண்டும் வயல் நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைக்கைதிகளின் கடும் உழைப்பில் உருவான இந்த நெற்செய்கை, அறுவடைக்குச் சில நாட்களே இருந்த