சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில்

இந்த கைது சம்பவத்துக்கு பின், நிலைமை சீரடையும் வரை வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்றம், அந்த நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.