முதற் தடவையாக $5,000ஐத் தாண்டிய தங்கம்

இதேவேளை ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலையானது வெள்ளிக்கிழமை (23) முதற்தடவையாக 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தொட்டுள்ளது. இது கடந்தாண்டிலிருந்து 150 சதவீத அதிகரிப்பாகும்.

வழமையை விட அதிகமான பணவீக்கம், நலிவான ஐக்கிய அமெரிக்க டொலர், உலகெங்கிலுமுள்ள மத்திய வங்கிகளால் தங்கம் வாங்கப்படுகின்றமை,  இவ்வாண்டு மீண்டும் வட்டி வீதங்களை ஐக்கிய அமெரிக்க மத்திய வங்கி குறைக்கவுள்ளமை உள்ளிட்ட காரணங்களாலும் காஸா, உக்ரேனில் யுத்தத்தாலும், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவை ஐ. அமெரிக்கா கைப்பற்றியதாலும் இவ்வதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.