உங்களது உதவிகள் சரியான முறையில், உரிய மக்களைச் சென்றடைவதையும், இதில் எவ்வித மோசடிகளும் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த வடக்கு மாகாண ஆளுநர் திரு. நா. வேதநாயகன் அவர்கள் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.இன்று (02.12.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஐ.நா. முகவர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான கலந்துரையாடலில் இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒருங்கிணைப்பு அவசியம்: அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உண்மையான தேவைகளை அறிந்து உதவுங்கள். இதற்கு மாவட்டச் செயலகங்களில் உருவாக்கப்பட்டுள்ள ‘இடர் முகாமைத்துவக் குழுக்களை’ அணுகுங்கள்.
மோசடிகளைத் தவிர்க்கவும்: வெளிநாடுகளில் நிதி திரட்டி, பெயரளவில் உதவிகளைச் செய்துவிட்டுப் புகைப்படங்களை மட்டும் அனுப்பும் மோசடிக் கும்பல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவும். மாவட்டச் செயலகத்தின் பரிந்துரை அல்லது அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அணுகுபவர்களிடம் கவனமாக இருக்கவும்.
தேவையை அறிந்து உதவுங்கள்: மக்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். எனவே, உணவுப் பொதிகளைத் தாண்டி, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவது பயனுள்ளதாக அமையும்.
அரச இடைவெளியை நிரப்புதல்: அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுக்கு மேலதிகமாக, மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய அவசியமான உதவிகளை (Gap filling) தன்னார்வலர்கள் பொறுப்பேற்பது சிறந்தது.
தொடர்புகளுக்கு – இடர் முகாமைத்துவக் குழு: இணைப்பாளர்கள்நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க விரும்புவோர் தயவுசெய்து பின்வரும் அந்தந்த மாவட்டத்திற்குரிய அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்:
யாழ்ப்பாணம்: திரு. சுரேந்திரநாதன் – 077 484 0199கிளிநொச்சி: திருமதி. அஜித்தா – 077 565 0671மன்னார்: திரு. பிரதீப் – 071 990 5324வவுனியா: திரு. கமலதாசன் – 077 613 8369முல்லைத்தீவு: திரு. ரஜினிகாந்த் – 077 370 7720 திரு. கோகுலராஜ் – 077 395 7886ஒன்றிணைவோம்! பாதிக்கப்பட்ட எமது மக்களை மீட்டெடுப்போம்!
#NorthernProvince#FloodRelief#GovernorNP#SriLanka#Jaffna#Kilinochchi#Mullaitivu#Mannar#Vavuniya#DisasterManagement#ReliefWork#NGO#DiasporaSupport